பொது செய்தி

தமிழ்நாடு

புறநோயாளிகள் பிரிவில் தடுப்பூசி முதியோருக்காக பிரத்யேக ஏற்பாடு

Added : ஆக 28, 2021
Share
Advertisement
சென்னை : புறநோயாளிகள் சிகிச்சை பிரிவுகளிலேயே கொரோனா தடுப்பூசி செலுத்தும் வசதிகள், ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் துவக்கப்பட்டுள்ளது.இது குறித்து, மருத்துவமனை முதல்வர் டாக்டர் தேரணிராஜன் கூறியதாவது:தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள், முதன் முதலில் துவக்கப்பட்ட மருத்துவமனைகளில், ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையும் ஒன்று. அதன் தொடர்ச்சியாக, 24 மணி

சென்னை : புறநோயாளிகள் சிகிச்சை பிரிவுகளிலேயே கொரோனா தடுப்பூசி செலுத்தும் வசதிகள், ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் துவக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, மருத்துவமனை முதல்வர் டாக்டர் தேரணிராஜன் கூறியதாவது:தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள், முதன் முதலில் துவக்கப்பட்ட மருத்துவமனைகளில், ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையும் ஒன்று. அதன் தொடர்ச்சியாக, 24 மணி நேரமும் தடுப்பூசி செலுத்தும் மையமும் துவக்கப்பட்டுள்ளது.இந்தாண்டு ஜனவரி மாதம் முதல் தற்போது வரை, 75 ஆயிரம் பேருக்கு, தடுப்பூசி செலுத்தி உள்ளோம்.

கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி மட்டுமே தீர்வு. ஆனால், தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.அதேபோல், முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டு, இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த தவறுவோரும் அதிகளவில் உள்ளனர். ஒரு தவணை தடுப்பூசி செலுத்தி கொள்வதால், எந்த பயனும் இல்லை.

மற்றொரு புறம் நாள்பட்ட நோயாளிகள் மற்றும் முதியவர்கள் தங்களை அலைக்கழிப்பரோ என்ற எண்ணத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தயங்குகின்றனர்.இதையடுத்து, புறநோயாளிகள் சிகிச்சை பிரிவிலேயே, தடுப்பூசி செலுத்தும் வசதியை நாங்கள் முன்னெடுத்துள்ளோம்.அதன்படி, சிகிச்சைக்கு வரும் முதியவர்கள், நீரிழிவு நோயாளிகளை சம்பந்தப்பட்ட டாக்டர்கள் பரிசோதித்தப்பின், அவர்கள் இருக்கும் இடத்திலேயயே சென்று தடுப்பூசி செலுத்தும் நடைமுறை துவக்கப்பட்டுள்ளது.

மாநிலத்திலேயே வேறு எந்த மருத்துவமனையிலும் இல்லாத வகையில், முதன் முறையாக ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் இத்தகைய வசதியை துவக்கியுள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X