மின்சாரம் தாக்கி குழந்தை மரணம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மின்சாரம் தாக்கி குழந்தை மரணம்

Added : ஆக 28, 2021
Share
திண்டுக்கல்லை சேர்ந்தவர் ரஞ்சித், 24; இவரது மனைவி பச்சையம்மாள், 21. சக்திதேவி (எட்டு மாதம்) என்ற மகள் உள்ளார். ரஞ்சித், காங்கயம் சிவன்மலை பகுதியில் ஒரு தேங்காய் களத்தில் வேலை செய்கிறார். அப்பகுதியில் உள்ள குடியிருப்பில் வசிக்கின்றனர்.நேற்று காலை 7:00 மணியளவில் ரஞ்சித் தேங்காய் களத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். பச்சயைம்மாள் வீட்டினுள் சமைத்துக் கொண்டிருந்தார்.

திண்டுக்கல்லை சேர்ந்தவர் ரஞ்சித், 24; இவரது மனைவி பச்சையம்மாள், 21. சக்திதேவி (எட்டு மாதம்) என்ற மகள் உள்ளார். ரஞ்சித், காங்கயம் சிவன்மலை பகுதியில் ஒரு தேங்காய் களத்தில் வேலை செய்கிறார். அப்பகுதியில் உள்ள குடியிருப்பில் வசிக்கின்றனர்.நேற்று காலை 7:00 மணியளவில் ரஞ்சித் தேங்காய் களத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். பச்சயைம்மாள் வீட்டினுள் சமைத்துக் கொண்டிருந்தார். வீட்டினுள் தவழ்ந்து விளையாடி கொண்டிருந்த குழந்தை சக்திதேவி, கீழே கிடந்த மின்சார ஜங்சன் பாக்சை பிடித்து இழுத்தது. எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி குழந்தை அதே இடத்தில் உயிரிழந்தது. காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.
மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் ஆனந்த் ஓரான், 25. பல்லடம் அருகே, கள்ளக்கிணறில் உள்ள காட்டன் மில்லில் தங்கி வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை, தங்கியுள்ள ரூமுக்கு அருகில் குளிக்கச் சென்ற போது, கால் தவறி அருகில் இருந்த மின் பெட்டி மீது விழுந்தார். இதில், மின்சாரம் தாக்கி இறந்தார்; பல்லடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

கொள்ளையரை பிடிக்க தனிப்படை

பெருந்தொழுவு கவுண்டம்பாளையத்தை சேர்ந்த தன பிரியா, என்பவரிடம், பாலீஷ் போட்டு தருவதாக கூறி, எட்டரை பவுன் நகையை இருவர் பறித்து சென்றனர். 'சிசிடிவி' காட்சிகளை ஆய்வு செய்து, கொள்ளையரை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.விபத்து; 2 பேர் பலிஅனுப்பர்பாளையத்தை சேர்ந்த நாகராஜ் மனைவி வள்ளியம்மாள், 55. திருப்பூர் - கரட்டாங்காட்டை சேர்ந்தவர் வேலுசாமி, 49. இருவரும் உறவினர்கள். நேற்று மதியம் தாராபுரத்தில் இருந்து திருப்பூருக்கு சென்றனர். அவிநாசிபாளையம் அருகே, கோவையில் இருந்து திருப்பூருக்கு சென்ற லாரி, பைக் மீது மோதியது. வள்ளியம்மாள் உயிரிழந்தார். வேலுசாமி காயத்துடன் தப்பினார்.

மற்றொரு விபத்து

பொங்கலுார் - நாச்சிபாளையம், ரங்கா நகரை சேர்ந்தவர் தங்கவேல், 60. தொழிலாளி. இவர் நேற்று காலை ரங்கபாளையம் அருகே நடந்து சென்றபோது, அவ்வழியே வந்த மொபட் மோதியது. பலத்த காயமடைந்த அவர், திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவிநாசிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
திருநங்கை பலி

வெள்ளகோவில் அடுத்த, கே.வி., பழனிசாமி நகரில் வசிப்பவர், மாதேஸ்வரன், 49; திருநங்கை ஆனந்தி,40 என்பவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். வீட்டில் இருவரும் மயங்கிய நிலையில் கிடந்ததை அருகில் வசிப்போர் பார்த்துள்ளனர்.வெள்ளகோவில் போலீசார், அங்கு வந்து விசாரித்தனர். ஆனந்தி இறந்தது தெரியவந்தது.

போலீசார் கூறுகையில், ''சில தினங்களாக, ஆனந்திக்கு, வயிற்றுப்பிரச்னை ஏற்பட்டது. மாதேஸ்வரன் கூல்டிரிங்ஸ் வாங்கிக்கொடுத்துள்ளார். இந்நிலையில், மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஆனந்தி இறந்ததாக மாதேஸ்வரன் சொல்கிறார். ஆனந்தியின் நிலை கண்டு, மாதேஸ்வரன், பிளே டால் கையை அறுத்துக்கொண்டார். பிரேத பரி சோதனை அறிக்கைக்கு பின்பே, நடந்தது என்ன என்பது உறுதியாக தெரியவரும்'' என்றனர்.

திண்டுக்கல்லை சேர்ந்தவர் ரஞ்சித், 24; இவரது மனைவி மனைவி பச்சையம்மாள், 21. சக்திதேவி (எட்டு மாதம்) என்ற மகள் உள்ளார். ரஞ்சித், காங்கயம் சிவன்மலை பகுதியில் ஒரு தேங்காய் களத்தில் வேலை செய்கிறார். அப்பகுதியில் உள்ள குடியிருப்பில் வசிக்கின்றனர்.நேற்று காலை 7:00 மணியளவில் ரஞ்சித் தேங்காய் களத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். பச்சயைம்மாள் வீட்டினுள் சமைத்துக் கொண்டிருந்தார். வீட்டினுள் தவழ்ந்து விளையாடி கொண்டிருந்த குழந்தை சக்திதேவி, கீழே கிடந்த மின்சார ஜங்சன் பாக்சை பிடித்து இழுத்தது.எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி குழந்தை அதே இடத்தில் உயிரிழந்தது.காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X