பொது செய்தி

தமிழ்நாடு

உத்திரமேரூர் கல் குவாரியில் விதிமீறல்

Added : ஆக 28, 2021
Share
Advertisement
சென்னை : 'உத்திரமேரூர் கல் குவாரியில், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவு கற்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது' என, கூட்டுக்குழு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் உள்ள கல் குவாரியில், பிப்., 4ம் தேதி ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.இது தொடர்பாக, 'தினமலர்' நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, தேசிய பசுமை

சென்னை : 'உத்திரமேரூர் கல் குவாரியில், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவு கற்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது' என, கூட்டுக்குழு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் உள்ள கல் குவாரியில், பிப்., 4ம் தேதி ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.இது தொடர்பாக, 'தினமலர்' நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு வழக்கு பதிவு செய்தது.இது தொடர்பாக ஆய்வு செய்ய, காஞ்சிபுரம் கலெக்டர், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய மூத்த விஞ்ஞானி, புவியியல் மற்றும் சுரங்கத் துறை வல்லுனர் அடங்கிய கூட்டுக்குழு அமைத்து தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

விதி மீறல்:

இக்குழு தாக்கல் செய்த ஆய்வறிக்கை:உத்திரமேரூர் கல் குவாரியில், ஏப்., 23ம் தேதியில் கூட்டுக்குழு ஆய்வு செய்தது.இதில், குவாரி அறிவியல் பூர்வமாக வரையறுக்கப்பட்ட முறையில், தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இயங்கவில்லை. சுற்றுச்சூழல் அனுமதியில், குவாரி பணிகளை 62 மீட்டர் ஆழம் வரை மேற்கொள்ள வேண்டும் என, நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அதற்கும் அதிகமாக கற்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளன. குவாரி இடத்தை ஒட்டியுள்ள, அனுமதி பெறாத 1.55 ஏக்கர் பரப்பு இடத்தில், விதிமீறி குவாரி பணிகளை ஒப்பந்ததாரர் மேற்கொண்டுள்ளார்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நடவடிக்கை:

இந்நிலையில் வழக்கு, நீதிபதி கே.ராமகிருஷ்ணன், உறுப்பினர் கே.சத்யகோபால் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், விசாரணைக்கு வந்தது. அப்போது, குவாரி தரப்பு வழக்கறிஞர், கூட்டுக்குழு முறையாக ஆய்வு செய்யவில்லை. அப்பகுதியில் மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும் என வாதிட்டார்.

பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:குவாரி தரப்பு வாதத்தை ஏற்று, தொடர்புடைய பகுதியில் கூட்டுக்குழு மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும். அதில், அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக குவாரி பணிகள் நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டால், அது தொடர்பாக கனிமவளத் துறை எடுத்த நடவடிக்கை என்ன என்பது குறித்த அம்சங்கள் இடம்பெற்ற ஆய்வறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.வழக்கு விசாரணை, செப்., 23க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X