பொது செய்தி

தமிழ்நாடு

பெருங்குடி மண்டலத்தில் விழிப்புணர்வு ஓவியங்கள்

Added : ஆக 28, 2021
Share
Advertisement
உள்ளகரம் : பெருங்குடி மண்டலத்திற்கு உட்பட்ட பூங்காக்கள், பொது இடங்களில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன.சென்னை, பெருங்குடி மண்டலத்திற்கு உட்பட்ட பொது இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்படுவதை தடுக்கும் வகையில், விழிப்புணர்வு ஓவியங்கள் வரையப்படுகின்றன. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:மாநகராட்சி பூங்காக்கள், அரசுப்

உள்ளகரம் : பெருங்குடி மண்டலத்திற்கு உட்பட்ட பூங்காக்கள், பொது இடங்களில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன.

சென்னை, பெருங்குடி மண்டலத்திற்கு உட்பட்ட பொது இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்படுவதை தடுக்கும் வகையில், விழிப்புணர்வு ஓவியங்கள் வரையப்படுகின்றன. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:மாநகராட்சி பூங்காக்கள், அரசுப் பள்ளிகள், அலுவலகங்கள், குளக்கரை பகுதி மற்றும் பொது இடங்களில், தனியார் போஸ்டர்கள் ஒட்டி சீரழிப்பதை தவிர்க்கும் வகையில், அழகிய ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன.

இதில், பாரம்பரியத்தை பறைசாற்றுதல், தமிழ்மொழியை பெருமைப்படுத்துதல், கல்வி, விளையாட்டு போட்டிகள், விவசாயம் ஆகியவற்றை ஊக்கப்படுத்தும் வகையிலான ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன. இந்த ஓவியங்கள், நன்கொடையாளர்கள், மாநகராட்சி வாயிலாக வரையப்படுகின்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X