பொது செய்தி

தமிழ்நாடு

5க்குள் ஆசிரியர் குடும்பத்தினர் தடுப்பூசி போடுவது அவசியம்!

Added : ஆக 28, 2021
Share
Advertisement
சென்னை:'பள்ளி ஆசிரியர்கள், அவர்களது குடும்பத்தினர் அனைவரும், செப்., 5க்குள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்' என, பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வ விநாயகம் அறிவுறுத்தி உள்ளார்.முன்னுரிமை இதுகுறித்து, அனைத்து மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குனர்களுக்கு, அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:தமிழகத்தில் இந்தாண்டு ஜன., 16 முதல், கொரோனா தடுப்பூசி போடப்பட்டு

சென்னை:'பள்ளி ஆசிரியர்கள், அவர்களது குடும்பத்தினர் அனைவரும், செப்., 5க்குள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்' என, பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வ விநாயகம் அறிவுறுத்தி உள்ளார்.


முன்னுரிமை



இதுகுறித்து, அனைத்து மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குனர்களுக்கு, அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:தமிழகத்தில் இந்தாண்டு ஜன., 16 முதல், கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

தமிழகத்துக்கு 14.57 லட்சம் கோவிஷீல்டு; 2.17 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகளை கூடுதலாக வழங்குவதாக, மத்திய அரசு உறுதி அளித்துஉள்ளது. அவ்வாறு அளிக்கப்படும் தடுப்பூசிகளை, இரண்டாம் தவணை போட்டுக் கொள்வோருக்கும், ஆசிரியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் வழங்க முன்னுரிமை தர வேண்டும்.

அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளும், தங்கள் வரையறைக்கு உட்பட்ட பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் பிற பணியாளர்களை, வரும் 5ம் தேதிக்குள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள அறிவுறுத்த வேண்டும். மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து, சிறப்பு தடுப்பூசி முகாம்களை நடத்த வேண்டும்


.நடவடிக்கை

பள்ளி வாரியாக கணக்கெடுப்பு நடத்தி, எவரெவர் தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை என்பது தொடர்பான விபரங்களை திரட்ட வேண்டும். அவர்கள் அனைவரும் விரைந்து தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X