பொது செய்தி

தமிழ்நாடு

கடல் பூங்கா அமைக்கும் பணி தாமதம்

Added : ஆக 28, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் சக்கரகோட்டை கிழக்கு கடற்கரை சாலையில், ரூ.22 கோடியில் 50 ஏக்கரில் அமைக்கப்படும் கடல் பூங்காவில் தொழில் தொடங்க நிறுவனங்கள் முன்வராததால் பணி 2 ஆண்டிற்கும் மேலாக ஆமை வேகத்தில் நடக்கிறது.ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயத்திற்கு அடுத்து பிரதான தொழிலாக மீன்பிடி தொழில் உள்ளது. இங்கு பிடிக்கப்படும் மீன்கள் அதிகளவில் வெளிநாடு, மாநிலங்களுக்கு
கடல் பூங்கா அமைக்கும் பணி தாமதம்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் சக்கரகோட்டை கிழக்கு கடற்கரை சாலையில், ரூ.22 கோடியில் 50 ஏக்கரில் அமைக்கப்படும் கடல் பூங்காவில் தொழில் தொடங்க நிறுவனங்கள் முன்வராததால் பணி 2 ஆண்டிற்கும் மேலாக ஆமை வேகத்தில் நடக்கிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயத்திற்கு அடுத்து பிரதான தொழிலாக மீன்பிடி தொழில் உள்ளது. இங்கு பிடிக்கப்படும் மீன்கள் அதிகளவில் வெளிநாடு, மாநிலங்களுக்கு செல்கிறது. ஆனால் மீன்களை பதப்படுத்தும், சுத்தம் படுத்தி ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் இங்கு இல்லை. துாத்துக்குடிக்கு கொண்டுசென்று அங்குள்ள தனியார் தொழிற்சாலைகளில் சுத்தப்படுத்தி வெளியூர்களுக்கு அனுப்புகின்றனர். இதனை தவிர்க்க ராமநாதபுரத்தில் கடல் உணவு தொழில்நிறுவனங்கள் கொண்டு வருவதற்கு திட்டமிடப்பட்டது. சிட்கோ சார்பில், ஜப்பான் பன்னோக்கு கூட்டுறவு முகவை உதவியுடன் சக்கரக்கோட்டை கிழக்கு கடற்கரை சாலை அருகே ரூ.22 கோடி செலவில் 100 ஏக்கரில் கடல் பூங்கா அமைக்க திட்ட மதிப்பீடு தயார் செய்தனர்.

2019 ல் முதற்கட்டமாக 50 ஏக்கரில் பணிகள் துவங்கப்பட்டன. தொழில் மனை வளாகங்கள், மீன்பிடி தொழில் தொடர்பான கட்டமைப்புகள், தண்ணீர், கழிப்பறை, ரோடு ஆகிய அடிப்படை கட்டடமைப்பு பணிகள் ஆமை வேகத்தில் நடக்கிறது. கடல் பூங்கா வளாகத்தில் மீன் உணவு வகைகள் தயாரித்தல், மீன்பிடி வலைகள், படகு தயாரித்தல் போன்ற சிறு, குறு நிறுவனங்கள் தொடங்க திட்டமிட்டனர். இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் பலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

சில நிறுவனங்கள் தொழில்தொடங்க விண்ணப்பித்துள்ளன. அதற்குரிய கட்டடப்பணிகள் கடல் பூங்கா பணியை விரைவுப்படுத்தி, இந்தாண்டிற்குள் தொழில் நிறுவனங்கள் கொண்டுவருவதற்கு சிட்கோ நிறுவனம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.------

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X