பொது செய்தி

தமிழ்நாடு

மின்னணு தயாரிப்புகளில் புதுமை புகுத்தும் பி.பி.எல்.,

Added : ஆக 28, 2021
Share
Advertisement
சென்னை : வீட்டு உபயோக மின்னணுப் பொருட்களின் தயாரிப்பில் பி.பி.எல்., நிறுவனம், தொடர்ந்து புதுமையை புகுத்தி வருகிறது.கொரோனா ஊரடங்கில், பெரும்பாலானோர் வீடுகளில் முடங்கிக் கிடந்த நிலையில், மக்கள் தேவை அறிந்து, உயர்தர வடிகட்டும் திறனுடன் 'ஏசி' மற்றும் பாக்டீரியா, மாசுக் கட்டுப்படுத்தும் மின்விசிறி, 'நேச்சுரோபிரஷ்' தொழில்நுட்பத்தில் 'பிரிட்ஜ்'களையும் பி.பி.எல்.,

சென்னை : வீட்டு உபயோக மின்னணுப் பொருட்களின் தயாரிப்பில் பி.பி.எல்., நிறுவனம், தொடர்ந்து புதுமையை புகுத்தி வருகிறது.

கொரோனா ஊரடங்கில், பெரும்பாலானோர் வீடுகளில் முடங்கிக் கிடந்த நிலையில், மக்கள் தேவை அறிந்து, உயர்தர வடிகட்டும் திறனுடன் 'ஏசி' மற்றும் பாக்டீரியா, மாசுக் கட்டுப்படுத்தும் மின்விசிறி, 'நேச்சுரோபிரஷ்' தொழில்நுட்பத்தில் 'பிரிட்ஜ்'களையும் பி.பி.எல்., நிறுவனம் தயாரித்துள்ளது.அதே போல், ஓ.டி.டி., தளங்களில் உள்ள படங்களை தரமான முறையில், திரை முழுதும் காட்சிகளை பார்க்கும் வகையில், '4 கே ஆண்ட்ராய்டு' ஸ்மார்ட் 'டிவி'க்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

அதே போல், வழக்கமான சலவை எந்திரங்களுக்கு தேவைப்படும் நீரில், 30 சதவீதத்தை மட்டுமே பயன்படுத்தி, துவைக்கும் வகையில், 'வாஷிங் மிஷின்'கள், ஸ்மார்ட் போன் வாயிலாகவும், சென்சார்களின் வாயிலாக கட்டுப்படுத்தும் மின் விளக்குகள், இன்வெர்ட்டர்கள், ஆடியோ பிளேயர், சமையலறை சாதனங்கள் உள்ளிட்டவையும் சிறப்பான தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளன.இந்த பொருட்களை வாங்க விரும்புவோருக்கு, ரிலையன்ஸ் விற்பனையகங்களில் சிறப்பு கடன் வசதியையும், பி.பி.எல்., நிறுவனம் செய்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X