தமிழ்நாடு

'டோல்கேட்' வசூல் நிறுத்த அறிவிப்பு: பொதுமக்கள் அமோக வரவேற்பு

Added : ஆக 28, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சோழிங்கநல்லுார் மண்டலத்தில் இருந்த நான்கு சுங்கச்சாவடிகளில், 30ம் தேதி முதல் கட்டணம் வசூலிப்பது நிறுத்தப்படுவதாக, அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பை தொடர்ந்து, மக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.சென்னை, பழைய மாமல்லபுரம் சாலை, 2009ம் ஆண்டு, 300 கோடி ரூபாய் செலவில், ஆறுவழி சாலையாக தரம் உயர்த்தப்பட்டு, ராஜிவ் காந்தி சாலைஎன பெயர் மாற்றப்பட்டது. பராமரிப்பு
 'டோல்கேட்' வசூல் நிறுத்த அறிவிப்பு: பொதுமக்கள் அமோக வரவேற்பு

சோழிங்கநல்லுார் மண்டலத்தில் இருந்த நான்கு சுங்கச்சாவடிகளில், 30ம் தேதி முதல் கட்டணம் வசூலிப்பது நிறுத்தப்படுவதாக, அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பை தொடர்ந்து, மக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

சென்னை, பழைய மாமல்லபுரம் சாலை, 2009ம் ஆண்டு, 300 கோடி ரூபாய் செலவில், ஆறுவழி சாலையாக தரம் உயர்த்தப்பட்டு, ராஜிவ் காந்தி சாலைஎன பெயர் மாற்றப்பட்டது. பராமரிப்பு பணிகள், தமிழக சாலை மேம்பாட்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இச்சாலையில், துரைப்பாக்கம், சோழிங்கநல்லுார், சிறுச்சேரி ஆகிய பகுதிகளில், ஐந்து சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு, வாகனங்களுக்கு ஏற்றவாறு கட்டணம் வசூலிக்கப்பட்டது.

இந்த சுங்கச் சாவடிகளில், 2009ம் ஆண்டு முதல், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்டணம் உயர்த்தப்பட்டு வந்தது. ஆறு வழிச்சாலையான பின், ராஜிவ்காந்தி சாலையில் ஏராளமான ஐ.டி., நிறுவனங்கள் வர ஆரம்பித்தன. இதனால், இச்சாலையில், கடந்த 10 ஆண்டு களில் போக்குவரத்து பல மடங்கு அதிகரித்தது.

ராஜிவ்காந்தி சாலையில், மத்திய கைலாஷில் இருந்து கேளம்பாக்கம் வரை, நாள் ஒன்றுக்கு சராசரியாக, 80 ஆயிரம் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் பயணிக்கின்றன; 200க்கும் மேற்பட்ட மாநகர பேருந்துகள் தினமும் ஆறு நடைகள் இயக்கப்படுகின்றன.சுங்கச்சாவடிகளில், 10 வினாடிகளில் ஒரு வாகனம் கடந்து செல்வதால், ராஜிவ்காந்தி சாலையில் தினமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதனால், நோயாளிகள், வேலைக்கு செல்வோர் மற்றும் பள்ளி, கல்லுாரி காலங்களில் மாணவ - மாணவியர் மிகவும் பாதிக்கப்பட்டனர். பணிக்கு செல்வோர் தினமும் அவதிப்பட்டு வந்தனர். போக்குவரத்து நெரிசல், கடும் நேர விரயம் ஆகியவற்றை தவிர்க்க, இப்பகுதியில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என, பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூல் நிறுத்தப்படும் என்ற அரசின் அறிவிப்பு பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. சோழிங்கநல்லுார் மாநகராட்சியாக விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதியில் இருந்த சுங்கச்சாவடிகளால், போக்குவரத்து நெரிசல் அதிகரித்து, வாகன ஓட்டிகள் தவித்தனர். இலவச பாஸ் கொடுத்தாலும், அவர்களும் இதே பிரச்னையால் அவதிப்பட்டனர். அரசின் இந்த அறிவிப்பு மிகவும் வரவேற்கத்தக்க ஒன்று. எனினும், நிரந்தரமாக சுங்கச்சாவடிகளை அங்கிருந்து அகற்ற வேண்டும்.குமாரராஜா, 62, பள்ளிக்கரணை சதுப்பு நில பாதுகாப்பு இயக்கம் ஒருங்கிணைப்பாளர், வேளச்சேரி.

சோழிங்கநல்லுாரில் இருந்த நான்கு சுங்கச்சாவடிளை, திருட்டு தனமாக கடக்க முயலும் வாகனங்கள், குடியிருப்பு பகுதிகளில் புகுந்து செல்வதால், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டன. மேலும், கடும் புழுதியால் அவதிப்பட்டோம். சுங்கச்சாவடிகளை அகற்ற, பல ஆண்டுகளாக போராடினோம். அப்பிரச்னைக்கு தற்போது தீர்வு கிடைத்துள்ளது.பிரான்சிஸ், 78,குடியிருப்போர் நலச்சங்க கூட்டமைப்பு தலைவர், துரைப்பாக்கம்.

மெட்ரோ ரயில் பணிக்காக, சுங்கச்சாவடிகளில் கட்டண வசூல் நிறுத்தப்படுவதாக கூறப்பட்டாலும், இந்த அறிவிப்பு எல்லையில்லா மகிழ்ச்சி அளிக்கிறது. இதை நிரந்தரமாக அகற்ற வேண்டும் என்பது தான், பல்லாயிரக்கணக்கான மக்களின் எதிர்பார்ப்பு. குறிப்பாக, நான்கு சக்கர வாகனங்களில் பணிக்கு சென்று வருவோர், நிம்மதி பெருமூச்சுவிடுவர் என்பதில் சந்தேகம் இல்லை.பூபாலன், 41, தனியார் நிறுவன ஊழியர்,பெருங்குடி.

சென்னை மாநகருக்குள் சுங்கச்சாவடி இருப்பது போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கிறது. இதனால், பல தரப்பு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். செலவு ஒருபுறம் இருந்தாலும், சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் வரிசை கட்டி நிற்பதால், பொன்னான நேரம் வீணானது. இந்த சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என, பெரும்பாக்கம் நலச்சங்கத்தினருடன் இணைந்து பல போராட்டங்களை நடத்தினோம். இப்போது தான் இதற்கு தீர்வு கிடைத்துள்ளது.சுரேஷ், 44, விற்பனை முகவர், பெரும்பாக்கம்.

எங்களின் பல ஆண்டு கால போராட்டத்திற்கு தீர்வு கிடைத்ததாக கருதுகிறோம். சுங்கச்சாவடி அகற்ற சட்டசபையில் கடந்த ஆட்சியிலேயே குரல் கொடுத்த தொகுதி எம்.எல்.ஏ.,வுக்கும், தேர்தல் அறிக்கையில் அகற்றுவதாக உறுதி அளித்த முதல்வருக்கும், நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.கலைச்செல்வன், 47, குடியிருப்போர் நலச்சங்க கூட்டமைப்பு செயலர், துரைப்பாக்கம்.

-- நமது நிருபர்- -

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Suresh - Chennai,இந்தியா
30-ஆக-202110:55:29 IST Report Abuse
Suresh மாத்தூர் டோல் கேட்டும் சென்னை மாநகர்ச்சி தான். Need to remove that too i
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
28-ஆக-202111:54:21 IST Report Abuse
அசோக்ராஜ் ஒஎம்ஆர் சுங்கச் சாவடிகளை அகற்றுவதாகச் சொல்லவில்லையே? மெட்ரோ ரயில் பாதை கட்டுமான பணிக்கு இடைஞ்சலாக இருப்பதால் தற்காலிகமாக வசூல் மையங்கள் நிறுத்தப் படுகின்றன. ரயில் பாதை பணி நிறைவடைந்தவுடன் அதிகக் கட்டணத்துடன் வசூல் தொடங்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X