கொடி காத்த குமரனுக்கு மலர் தூவி மரியாதை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கொடி காத்த குமரனுக்கு மலர் தூவி மரியாதை

Added : ஆக 28, 2021
Share
திருப்பூர்:நாடு முழுவதும் சைக்கிளில் விழிப்புணர்வு பயணம் செல்லும் சி.ஆர்.பி.எப்., வீரர்கள் நேற்று திருப்பூர் குமரன் நினைவிடத்தில் மலர் துாவி மரியாதை செலுத்தினர்.நம் நாட்டின், 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சகோதரத்துவம், மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி, மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்.,) வீரர்கள் கன்னியாகுமரி முதல் டில்லி வரை, 2,700 கி.மீ., சைக்கிள் பயணம்
 கொடி காத்த குமரனுக்கு மலர் தூவி மரியாதை

திருப்பூர்:நாடு முழுவதும் சைக்கிளில் விழிப்புணர்வு பயணம் செல்லும் சி.ஆர்.பி.எப்., வீரர்கள் நேற்று திருப்பூர் குமரன் நினைவிடத்தில் மலர் துாவி மரியாதை செலுத்தினர்.நம் நாட்டின், 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சகோதரத்துவம், மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி, மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்.,) வீரர்கள் கன்னியாகுமரி முதல் டில்லி வரை, 2,700 கி.மீ., சைக்கிள் பயணம் மேற்கொள்கின்றனர்.கடந்த 22ம் தேதி துவங்கிய பேரணி, கடந்த 26ம் தேதி, 450 கி.மீ., பயணித்து, திருப்பூர் மாவட்டம், அவிநாசிபாளையம் வந்தது. நேற்று காலை, ஜெய்ஸ்ரீராம் கல்லுாரியில் இருந்து சைக்கிள் பயணத்தை கலெக்டர் வினீத் துவக்கி வைத்தார்.தாராபுரம் ரோடு வழியாக திருப்பூரை அடைந்த சைக்கிள் குழுவினர், கொடி காத்த குமரன் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து, குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.பின், அவிநாசி வழியாக கோவை புறப்பட்டு சென்றனர். நாளை மறுதினம் ஈரோடு செல்லும் இவர்கள், கிருஷ்ணகிரி வழியாக ஆந்திரா சென்று பிற மாநிலங்களுக்கு செல்கின்றனர். வரும் அக்., 2ம் தேதி டில்லி ராஜ்கோட் காந்தி நினைவிடத்தில் சைக்கிள் பயணம் நிறைவு பெறுகிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X