தமிழ்நாடு

திருப்பூர் மாவட்டத்துக்கு 'ரெட் அலர்ட்' : எதிர்கொள்ள தயார் நிலை! பேரிடர் மீட்புக்குழு சுறுசுறுப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

Updated : ஆக 28, 2021 | Added : ஆக 28, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில் அதிக மழைக்கு வாய்ப்புள்ளதாக 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. கரையோரங்களில் வசிப்போர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''திருப்பூர் மாவட்டத்தில் இன்று இடியுடன் கூடிய கனழையும், 29, 30 ஆகிய தேதிகளில் அதிக மழையும் பெய்ய வாய்ப்புள்ளது''
 திருப்பூர் மாவட்டத்துக்கு 'ரெட் அலர்ட்' : எதிர்கொள்ள தயார் நிலை! பேரிடர் மீட்புக்குழு சுறுசுறுப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில் அதிக மழைக்கு வாய்ப்புள்ளதாக 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. கரையோரங்களில் வசிப்போர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''திருப்பூர் மாவட்டத்தில் இன்று இடியுடன் கூடிய கனழையும், 29, 30 ஆகிய தேதிகளில் அதிக மழையும் பெய்ய வாய்ப்புள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூரில் ஜம்மனை, சங்கிலிப் பள்ளம், மாவட்டத்தில் அமராவதி, நொய்யல் ஆற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்போர் எச்சரிக்கையுடனும் பாதுகாப்புடனும் இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.மழை அதிகம் பெய்யும் போது, வீடுகளில் வெள்ளம் புகும் அபாயம் உள்ள இடங்களில் உள்ளோர் வீட்டை விட்டு வெளியேறி அருகேயுள்ள அரசு முகாம்களில் தங்க வேண்டும்.கால்நடைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்,இடியுடன் கூடிய கனமழை என்பதால், வீட்டிலிருந்து பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.

பாதுகாப்பில்லாத கட்டடங்கள், உயரமான கட்டடங்கள், மின் கம்பங்கள், மின் மாற்றிகள் மற்றும் மரங்களின் அருகே நிற்க வேண்டாம்.பொதுமக்களுக்கு உதவும் வகையில், பேரிடர் தணிப்பு மற்றும் மீட்புக்குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். மழையால் பாதிப்பு ஏற்படும் நிலையில், மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு 1077 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தயார் நிலையில்தீயணைப்பு துறை

மாவட்ட தீயணைப்பு அலுவலர் காங்கேய பூபதி கூறியதாவது:திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எட்டு தீயணைப்பு நிலையங்களிலும் நுாற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் 24 மணி நேரமும் தயார் நிலையில் உள்ளனர்.வெள்ள பாதிப்பு ஏற்படும் இடங்களில் மீட்பு பணிக்கு ரப்பர் படகுகள்; நீச்சல் பயிற்சி பெற்ற 30 வீரர்கள் தயாராக உள்ளனர். லைப் ஜாக்கெட்; நைலான் கயிறு, மணிலா ரோப், மின் ரம்பம் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு மற்றும் மீட்பு உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளன.

மழை பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் உடனடியாக விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். உரிய தீயணைப்பு நிலையங்கள் மற்றும் 101 ஆகிய எண்களில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.மின் ஊழியர்கள் உஷார்மின் வாரிய அலுவலகங்களிலும் மின் ஊழியர்கள் தயார்படுத்தப்பட்டுள்ளனர். மழை காரணமாக ஏற்படும் அசம்பாவிதம் தவிர்க்க பொது மக்கள் எச்சரிக்கையுடன் மின் உபகரணங்களைப் பயன்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை நேரத்தில் மின் கம்பம், மின் மாற்றி, மின் கம்பிகளுக்கு அருகே உள்ள மரங்கள் ஆகியவற்றை நெருங்காமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மின் வாரியத்தினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X