பொது செய்தி

தமிழ்நாடு

இன்று, 52 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி! அச்சம் தவிர்க்கலாம்... செலுத்த வாருங்கள்!

Added : ஆக 28, 2021
Share
Advertisement
திருப்பூர்;திருப்பூர் மாவட்டத்தில், இன்று ஒரே நாளில், 52 ஆயிரம் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை, 11 லட்சத்து, 22 ஆயிரத்து, 976 பேர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 9 லட்சத்து, 47 ஆயிரத்து, 830 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், ஒரு லட்சத்து, 75 ஆயிரத்து, 146 பேருக்கு இரண்டாம் தவணையும் செலுத்தப்பட்டுள்ளது.மாவட்டத்தில், 18 வயதை கடந்த, 6 லட்சத்து,

திருப்பூர்;திருப்பூர் மாவட்டத்தில், இன்று ஒரே நாளில், 52 ஆயிரம் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை, 11 லட்சத்து, 22 ஆயிரத்து, 976 பேர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 9 லட்சத்து, 47 ஆயிரத்து, 830 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், ஒரு லட்சத்து, 75 ஆயிரத்து, 146 பேருக்கு இரண்டாம் தவணையும் செலுத்தப்பட்டுள்ளது.மாவட்டத்தில், 18 வயதை கடந்த, 6 லட்சத்து, 18 ஆயிரத்து, 183 பேருக்கும், 45 வயதை கடந்த மூன்று லட்சத்து, 23 ஆயிரத்து, 305 பேருக்கும், 60 வயதை கடந்த, ஒரு லட்சத்து, 81 ஆயிரத்து 488 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.மாவட்டத்தில் இதுவரை ஓட்டுச்சாவடிகளான பள்ளிகளில் மட்டுமே தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இன்று முதல் அனைத்து அரசு மருத்துவமனை, மேம்படுத்தப்பட்ட, ஆரம்ப சுகாதார நிலையங்களில் முகாம் நடத்த கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.அதன்படி இன்று, மாநகராட்சி பகுதியில், 5 ஆயிரம் பேருக்கும், மருத்துவ கல்லுாரியில், 2,480 பேருக்கும், 17 வட்டாரங்களில் உள்ள மேம்படுத்தப்பட்ட நிலையங்களில் தலா, 100 வீதம், 1,700 பேருக்கும், ஒன்பது அரசு மருத்துவமனைகளில், 750 பேருக்கும் என மொத்தம், 9,930 கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.மாநகராட்சி பள்ளிகளில், 11,900 கோவிஷீல்டு, 1,700 கோவேக்ஸின், மாவட்டம் முழுதும் உள்ள பள்ளிகளில், 28,810 கோவிஷீல்டு, 2,780 கோவேக்ஸின் என மொத்தம், 43,490 தடுப்பூசி செலுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில், மொத்தம், 52 ஆயிரத்து, 490 தடுப்பூசி ஒரே நாளில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X