26 சதவீதம் சம்பளம் உயர்த்த உற்பத்தியாளர் சம்மதம்! தொழிற்சங்கங்கள் ஏற்க மறுப்பு

Added : ஆக 28, 2021
Share
Advertisement
திருப்பூர்;திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, ஆடை உற்பத்தியாளர் சங்கங்களும், தொழிற்சங்கங்களும் இணைந்து, ஒப்பந்தம் மேற்கொண்டு, சம்பள உயர்வு நிர்ணயிக்கின்றன. கடந்த 2016ல் நிறைவேற்றப்பட்ட சம்பள ஒப்பந்தம், கடந்த 2020, மார்ச்சில் காலாவதியானது.90 சதவீத சம்பள உயர்வு; 15 ஆயிரம் ரூபாய்க்கு மேல் உயரும் ஒவ்வொரு விலைவாசி புள்ளிக்கும், 30 பைசா
 26 சதவீதம் சம்பளம் உயர்த்த உற்பத்தியாளர் சம்மதம்! தொழிற்சங்கங்கள் ஏற்க மறுப்பு

திருப்பூர்;திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, ஆடை உற்பத்தியாளர் சங்கங்களும், தொழிற்சங்கங்களும் இணைந்து, ஒப்பந்தம் மேற்கொண்டு, சம்பள உயர்வு நிர்ணயிக்கின்றன. கடந்த 2016ல் நிறைவேற்றப்பட்ட சம்பள ஒப்பந்தம், கடந்த 2020, மார்ச்சில் காலாவதியானது.90 சதவீத சம்பள உயர்வு; 15 ஆயிரம் ரூபாய்க்கு மேல் உயரும் ஒவ்வொரு விலைவாசி புள்ளிக்கும், 30 பைசா பஞ்சப்படி உயர்வு உட்பட 14 அம்ச கோரிக்கை பட்டியில் தயாரித்து, புதிய ஒப்பந்தம் மேற்கொள்வதற்காக, தொழிற்சங்கங்கள், உற்பத்தியாளர் சங்கங்களிடம் வழங்கின.கொரோனாவால், பேச்சுவார்த்தை நடத்த முடியாத நிலை நீடித்தது. இந்நிலையில், கடந்த 4ம் தேதி இருதரப்பினரிடையே, முதல் சுற்று ஒப்பந்த பேச்சு நடந்தது. 24 சதவீத சம்பள உயர்வு; 14.5 பைசா பஞ்சப்படி உயர்வு வழங்க உற்பத்தியாளர் சங்கங்கள் சம்மதித்தன. ஆனால், தொழிற் சங்கங்கள் இதற்கு உடன்படவில்லை. அதனால், பேச்சுவார்த்தையும் நீள துவங்கியது. கடந்த 16ம் தேதி இரண்டாம் கட்டமாகவும், கடந்த 23ம் தேதி மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.மூன்றாம் சுற்று சம்பள பேச்சுவார்த்தை, 'சைமா' சங்க அரங்கில் நேற்று மாலை நடந்தது. பேச்சுவார்த்தை குழு தலைவர் துரைசாமி (ஏற்றுமதியாளர் சங்கம்) தலைமைவகித்தார். 'சைமா' தலைவர் ஈஸ்வரன், பொதுச்செயலாளர் பொன்னுசாமி, துணை தலைவர் கோவிந்தப்பன், செயற்குழு கமிட்டி உறுப்பினர் கந்தசாமி, ஏற்றுமதியாளர் சங்க துணை தலைவர் வேலுசாமி, இணை செயலாளர் செந்தில், 'நிட்மா' பழனிசாமி, 'சிம்கா' துணை தலைவர் பாரி, 'டீமா' முத்துரத்தினம், செயலாளர் செந்தில், 'டெக்மா' கிருஷ்ணன் ஆகிய உற்பத்தியாளர் சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.ஏ.ஐ.டி.யு.சி., சேகர், இசாக், சி.ஐ.டி.யு., மூர்த்தி, சம்பத், ஈஸ்வரமூர்த்தி, எல்.பி.எப்., பலசுப்பிரமணியம், பூபதி, அண்ணா தொழிற் சங்கம் விஸ்வநாதன், ஐ.என்.டி.யு.சி., சிவசாமி, பெருமாள், எம்.எல்.எப்., மனோகரன், பெருமாள், பி.எம்.எஸ்., சந்தானகிருஷ்ணன், ஹெச்.எம்.எஸ்., முத்துசாமி உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.முதல் மூன்று சுற்றுகள் வரை, 24 சதவீதம் சம்பள உயர்வு என்கிற நிலைப்பாட்டில் உற்பத்தியாளர் சங்கங்கள் உறுதியாக இருந்தன. நேற்றைய பேச்சுவார்த்தையில், கூடுதலாக இரண்டு சதவீதம் சேர்ந்து, அடுத்த நான்கு ஆண்டுகளில், 26 சதவீத சம்பள உயர்வு வழங்குவதாக தெரிவித்தன.ஆனால், தொழிற்சங்கங்கள் இதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. எனவே, மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தையிலும், தீர்வு எட்டப்படவில்லை. வரும் செப்., 3ம் தேதி, மாலை, 5:30 மணிக்கு, 'சைமா' அரங்கில், ஐந்தாம் சுற்று பேச்சுவார்த்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X