மாற்றுத்திறனாளிகள் முகாம்: திணறிய கலெக்டர் ஆபீஸ்

Added : ஆக 28, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில்,அரசு சலுகை மற்றும் நலத்திட்ட உதவிகள் பெறும் வகையில் அடையாள அட்டை வழங்க பயனாளிகளை கண்டறிய முகாம் நேற்று நடந்தது.இதற்காக மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் ஏராளமான மாற்றுத் திறனாளிகள் மற்றும் அவர்களின் பாதுகாப்பாளர்கள் சமூக இடைவெளி இன்றி குவிந்தனர். இந்த முகாமின் போது, உரிய
 மாற்றுத்திறனாளிகள் முகாம்: திணறிய கலெக்டர் ஆபீஸ்

திருப்பூர்:திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில்,அரசு சலுகை மற்றும் நலத்திட்ட உதவிகள் பெறும் வகையில் அடையாள அட்டை வழங்க பயனாளிகளை கண்டறிய முகாம் நேற்று நடந்தது.இதற்காக மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் ஏராளமான மாற்றுத் திறனாளிகள் மற்றும் அவர்களின் பாதுகாப்பாளர்கள் சமூக இடைவெளி இன்றி குவிந்தனர். இந்த முகாமின் போது, உரிய எண்ணிக்கையிலான மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் நியமிக்கப்படுவதில்லை.இதனால், முகாமுக்கு வருவோர் குறித்த விவரங்கள் முழுமையாக பதிவேற்றம் செய்யாமல் விண்ணப்பங்கள் தவிர்க்கப்படுகிறது. இதனால் தொடர்ந்து அடுத்தடுத்த முகாம்களில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் இவர்கள் கலெக்டர் அலுவலகம் வர வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதை தவிர்க்கும் வகையில் ஒன்றிய அல்லது தாலுகா அளவில் இதற்கான முகாம் நடத்தப்பட வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X