சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சொத்துக்காக போலி இறப்பு சான்று மகன்களுக்கு பயந்து தந்தை ஓட்டம்

Added : ஆக 28, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
ஓசூர்:தனக்கு போலி இறப்பு சான்றிதழ் பெற்ற மகன்களால், உயிருக்கு ஆபத்து ஏற்படும் என பயந்து, முதியவர் தலைமறைவாக உள்ளார்.தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த அண்ணாமலைபட்டியைச் சேர்ந்தவர் முருகேசன், 75. இவர், முதல்வர் தனிப்பிரிவு மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பிய மனு:எனக்கு மூன்று மகன்கள், ஒரு மகள். எனக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள இரு வீடுகள் உள்ளன. அவற்றை தங்கள்
 சொத்துக்காக போலி இறப்பு சான்று மகன்களுக்கு பயந்து தந்தை ஓட்டம்

ஓசூர்:தனக்கு போலி இறப்பு சான்றிதழ் பெற்ற மகன்களால், உயிருக்கு ஆபத்து ஏற்படும் என பயந்து, முதியவர் தலைமறைவாக உள்ளார்.

தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த அண்ணாமலைபட்டியைச் சேர்ந்தவர் முருகேசன், 75. இவர், முதல்வர் தனிப்பிரிவு மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பிய மனு:எனக்கு மூன்று மகன்கள், ஒரு மகள். எனக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள இரு வீடுகள் உள்ளன. அவற்றை தங்கள் பெயருக்கு மாற்றித் தருமாறு மகன்கள் கேட்டனர்.

மேலும், எனக்கு போலி இறப்பு சான்றிதழ் பெற்று, கம்பைநல்லுாரில் என் வங்கி கணக்கில் இருந்த பணத்தை எடுத்து விட்டனர். பல கோடி ரூபாய் மதிப்புள்ள என் சொத்துக்களையும், இறப்பு சான்றிதழ் கொடுத்து அபகரித்துள்ளனர். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.மகன்களால் ஆபத்து ஏற்படும் என நினைத்த முருகேசன், கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே கிராமத்தில் தஞ்சம் அடைந்துஉள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
03-செப்-202102:16:39 IST Report Abuse
Bhaskaran முதலில் அந்த போலி சான்றிதழ் தந்த அதிகாரிகள் யாரு விசாரணை செய்யுங்கள்
Rate this:
Cancel
R S BALA - CHENNAI,இந்தியா
28-ஆக-202112:35:16 IST Report Abuse
R S BALA இவன்தந்தை என்னோற்றான் கொல்..😥
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X