பொது செய்தி

தமிழ்நாடு

சில வரி செய்திகள்

Added : ஆக 28, 2021
Share
Advertisement
வீடு புகுந்து மொபைல் போன்கள் திருட்டுஐஸ்ஹவுஸ்: ராயப்பேட்டை, முத்தையா தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் தனலட்சுமி, 41. நேற்று அதிகாலை, இவரது வீட்டில் புகுந்த மர்மநபர்கள் இருவர், மொபைல் போனை திருடி சென்றனர். சத்தம் கேட்டு தனலட்சுமி எழுந்து பார்த்தபோது, இருசக்கர வாகனத்தில் தப்பினர். இது குறித்து, ஜாம்பஜார் போலீசார் விசாரிக்கின்றனர். இது தொடர்பாக, சந்தேகத்தின் அடிப்படையில்

வீடு புகுந்து மொபைல் போன்கள் திருட்டு

ஐஸ்ஹவுஸ்: ராயப்பேட்டை, முத்தையா தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் தனலட்சுமி, 41. நேற்று அதிகாலை, இவரது வீட்டில் புகுந்த மர்மநபர்கள் இருவர், மொபைல் போனை திருடி சென்றனர். சத்தம் கேட்டு தனலட்சுமி எழுந்து பார்த்தபோது, இருசக்கர வாகனத்தில் தப்பினர். இது குறித்து, ஜாம்பஜார் போலீசார் விசாரிக்கின்றனர். இது தொடர்பாக, சந்தேகத்தின் அடிப்படையில் அன்பரசு, 24, என்பவரை பிடித்து விசாரிக்கின்றனர்.

*அம்பத்துார்: அம்பத்துார், சிவானந்தா நகர் முதலாவது தெருவைச் சேர்ந்தவர் கண்ணன், 27; தனியார் நிறுவன ஊழியர். நேற்று காலை, 6:00 மணியளவில், வீட்டில் வைத்திருந்த இவரது மொபைல் போன் திருடு போனது.காலை, 8:30 மணியளவில், டீச்சர்ஸ் காலனி, அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த ரிச்சர்டு, 40, என்பவர் இதே மாதிரி போன் வைத்திருந்ததால், கண்ணன் விசாரித்த போது தப்பி ஓடினார். பின், அங்கிருந்தோர் உதவியுடன் ரிச்சர்டை பிடித்து அம்பத்துார் போலீசில் ஒப்படைத்தார். போலீசார், அவரை கைது செய்து மொபைல் போனை பறிமுதல் செய்தனர்.***

பள்ளி மாணவி மாயம்

மயிலாப்பூர்: மயிலாப்பூர், அப்பாதுரை தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரி, 48. இவரது மகள் ஹரிணி, 18; பள்ளி மாணவி. நேற்று முன்தினம் காலை கோவிலுக்கு செல்வதாகக் கூறிச் சென்றவர் வீடு திரும்பாததால், மயிலாப்பூர் காவல் நிலையத்தில் அன்றைய தினம் இரவு புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரிக்கின்றனர்.**

வீட்டில் பணம், பைக் திருட்டு

அம்பத்துார்: அம்பத்துார், கள்ளிக்குப்பம், காந்தி நகரைச் சேர்ந்தவர் ராஜா, 50. இவர், ஆவடி அடுத்த வெள்ளானுாரில் புது வீடு கட்டினார். அதன் கிரஹப்பிரவேசம் நேற்று அதிகாலை நடந்தது. அதற்காக, குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் அங்கு சென்றார். நேற்று காலை, 9:30 மணி அளவில், அம்பத்துாரில் உள்ள வீட்டிற்கு சென்றார். அப்போது பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த, 2.75 லட்சம் ரூபாய் மற்றும் இரு சக்கர வாகனத்தை மர்மநபர்கள் திருடி சென்றது தெரிந்தது. இது குறித்து, அம்பத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.***

போதையில் துாங்கியவர் உயிரிழப்பு

அம்பத்துார்: அம்பத்துார், ராம் நகர், நாகநாதன் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 55; தனியார் ஊழியர். இவர் குடும்பத்தை பிரிந்து தனியாக வசித்தார். நேற்று காலை இவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால், தகவலறிந்து அம்பத்துார் போலீசார் சென்று பார்த்த போது, வெங்கடேசன் மது போதையில் துாங்கியதால், நாக்கு வறண்டு உயிரிழந்தது தெரிந்தது. அழுகிய சடலத்தை மீட்டு மேலும் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X