இந்தியா

ஆண்டுக்கு ரூ.1.5 கோடி வருமானம் : அமிதாப் மெய்காப்பாளர் இடமாற்றம்

Added : ஆக 28, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
மும்பை :ஆண்டுக்கு 1.5 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியதாக சர்ச்சையில் சிக்கிய பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் மெய்க்காப்பாளர் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், மஹாராஷ்டிர மாநிலம் மும்பை ஜூஹூ பகுதியில் வசிக்கிறார். இவருக்கு மாநில அரசின் சார்பில், 'எக்ஸ்' பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது. கடந்த 2015ல், ஜிதேந்திரா ஷிண்டே என்ற
ஆண்டுக்கு ரூ.1.5 கோடி வருமானம் :  அமிதாப் மெய்காப்பாளர் இடமாற்றம்

மும்பை :ஆண்டுக்கு 1.5 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியதாக சர்ச்சையில் சிக்கிய பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் மெய்க்காப்பாளர் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், மஹாராஷ்டிர மாநிலம் மும்பை ஜூஹூ பகுதியில் வசிக்கிறார். இவருக்கு மாநில அரசின் சார்பில், 'எக்ஸ்' பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது.
கடந்த 2015ல், ஜிதேந்திரா ஷிண்டே என்ற கான்ஸ்டபிள், அமிதாப்புக்கு மெய்க்காப்பாளராக நியமிக்கப்பட்டார். அவர் சமீபத்தில் டி.பி.மார்க் போலீஸ் ஸ்டேஷனுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.


latest tamil news



அமிதாப்பின் மெய்க்காப்பாளர் என்ற பெயரை பயன்படுத்தி, ஷிண்டே ஆண்டுக்கு 1.5 கோடி சம்பாதிக்கிறார் என ஊடகங்களில் சமீபத்தில் செய்தி வெளியானது.

இதையடுத்தே அவர் இடமாற்றம் செய்யப்பட்டார் எனக் கூறப்படுகிறது.ஆனால் இது ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை செய்யப்படும் பணியிட மாற்றம் தான் என போலீஸ் உயர் அதிகாரிகள் கூறினர். ஷிண்டேவின் மனைவி பாதுகாவலர்களை நியமிக்கும் ஏஜன்சி நடத்துகிறார். அதன் மூலம் சில பிரபலங்களுக்கு பாதுகாவலர்கள் அனுப்பி வைத்து வருமானம் ஈட்டுகிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், ஷிண்டேவின் சொத்து மதிப்பு குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்
28-ஆக-202113:43:03 IST Report Abuse
Apposthalan samlin அமிதாப்பிடம் பணம் இல்லையா ? எதுக்கு அரசாங்கம் பாது காப்பு கொடுக்க வேண்டும் நடிகர்களுக்கு நமது வரிப்பணம் ஏன் விரயம் செய்ய வேண்டும் .
Rate this:
Cancel
rajan -  ( Posted via: Dinamalar Android App )
28-ஆக-202108:47:48 IST Report Abuse
 rajan இவருக்கு எதுக்கு அரசு செலவில் பாதுகாப்பு? அப்படி என்ன இவருக்கு ஆபத்து? ஒன்னும் புரியல.
Rate this:
Hari - chennai,சவுதி அரேபியா
28-ஆக-202113:08:36 IST Report Abuse
Hariவிடியலுக்கு காவல் காத்தபோது உங்களுக்கு இது தோணலியா நண்பா.?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X