சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வியாபாரியிடம் ரூ.10 லட்சம் பறிப்பு இன்ஸ்பெக்டர் வசந்தி அதிரடி கைது

Added : ஆக 28, 2021
Share
Advertisement
மதுரை:வியாபாரியிடம் 10 லட்சம் ரூபாய் பறித்த வழக்கில், தலைமறைவாக இருந்த பெண் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.சிவகங்கை மாவட்டம், இளையாங்குடியைச் சேர்ந்தவர் அர்ஷத், 32; பேக் வியாபாரி. பணத்தை இரட்டிப்பாக்கும் ஆசையில், 10 லட்சம் ரூபாயுடன், ஜூலை 5ல் மதுரை நாகமலை புதுக்கோட்டை வந்தார்.இதையறிந்த இன்ஸ்பெக்டர் வசந்தி, 35 மற்றும் அர்ஷத்தை ஆசை வார்த்தை கூறி அழைத்து வந்த பால்பாண்டி,
 வியாபாரியிடம் ரூ.10 லட்சம் பறிப்பு இன்ஸ்பெக்டர் வசந்தி அதிரடி கைது

மதுரை:வியாபாரியிடம் 10 லட்சம் ரூபாய் பறித்த வழக்கில், தலைமறைவாக இருந்த பெண் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.

சிவகங்கை மாவட்டம், இளையாங்குடியைச் சேர்ந்தவர் அர்ஷத், 32; பேக் வியாபாரி. பணத்தை இரட்டிப்பாக்கும் ஆசையில், 10 லட்சம் ரூபாயுடன், ஜூலை 5ல் மதுரை நாகமலை புதுக்கோட்டை வந்தார்.இதையறிந்த இன்ஸ்பெக்டர் வசந்தி, 35 மற்றும் அர்ஷத்தை ஆசை வார்த்தை கூறி அழைத்து வந்த பால்பாண்டி, பாண்டியராஜன், உக்கிரபாண்டி, சீமைச்சாமி ஆகியோர் பணத்தை பறித்தனர். ஜூலை 27ல் அர்ஷத் புகார்படி, குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இன்ஸ்பெக்டர் வசந்தி, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். வசந்தி தவிர மற்றவர்கள் கைதான நிலையில், முன்ஜாமின் கேட்டு உயர் நீதிமன்ற கிளையில் வசந்தி மனு செய்தார்.'வசந்தியை கைது செய்யாதது ஏன்' என ஆக., 23ல் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதையடுத்து, அவரை போலீசார் தீவிரமாக தேடினர். நேற்று முன்தினம், மதுரை தல்லாகுளம் போலீஸ் குடியிருப்பில் உள்ள அவரது வீட்டில் டி.எஸ்.பி., ரவிகுமார் தலைமையில் சோதனை நடந்தது. நகை சீட்டு உள்ளிட்ட சில ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

வசந்தியின் அலைபேசி டவர், அவர் கோத்தகிரியில் இருப்பதை காட்டியது. நேற்று முன்தினம் தனிப்படை போலீசார் சென்று, அங்குள்ள விடுதி ஒன்றில் குடும்பத்துடன் தங்கியிருந்த வசந்தியை கைது செய்தனர். அப்போது, போலீசாருக்கு ஒத்துழைக்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின், மதுரை அழைத்து வரப்பட்டார்.

அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து வரப்பட்ட வசந்தியை போட்டோ கிராபர்கள் படம் எடுக்க விடாமல், போலீசார் சிலர் பாதுகாப்பு வளையம் அமைத்து அழைத்துச் சென்றனர்.பின், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நிலக்கோட்டை கிளை சிறையில் வசந்தி அடைக்கப்பட்டார். இவ்வழக்கில் மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக, வசந்தியின் தம்பி குண்டு பாண்டியராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X