பொது செய்தி

தமிழ்நாடு

தடையின்றி குடிநீர் விநியோகம்

Added : ஆக 28, 2021
Share
Advertisement
சிவகங்கை நகராட்சி 26 வார்டுகளில் 46 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இந்நகர் மக்களின் வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்ய தினமும் வைகையில் இருந்து 10 லட்சம், காவிரியில் இருந்து 30 லட்சம் லிட்டர் குடிநீர் எடுக்கின்றனர்.இவற்றை நகரின் பல்வேறு இடங்களில் உள்ள 26 லட்சம் லிட்டர் குடிநீர் மேல்நிலை தொட்டிகளில் ஏற்றி ஒரு நாள் விட்டு ஒரு நாள் வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்து

சிவகங்கை நகராட்சி 26 வார்டுகளில் 46 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இந்நகர் மக்களின் வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்ய தினமும் வைகையில் இருந்து 10 லட்சம், காவிரியில் இருந்து 30 லட்சம் லிட்டர் குடிநீர் எடுக்கின்றனர்.

இவற்றை நகரின் பல்வேறு இடங்களில் உள்ள 26 லட்சம் லிட்டர் குடிநீர் மேல்நிலை தொட்டிகளில் ஏற்றி ஒரு நாள் விட்டு ஒரு நாள் வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்து வருகின்றனர். அந்த வகையில் இந்நகராட்சியில் வசிக்கும் மக்களுக்கு நபர் ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு 135 லிட்டர் குடிநீர் வழங்க வேண்டும். ஆனால் 97 லிட்டர் மட்டுமே வழங்குகின்றனர். காவிரி கூட்டு குடிநீர் திட்டம் 'வைகை'யில் கைவக்க தேவையில்லாத அளவிற்கு குடிநீர் வினியோகம் செய்யும் என்ற நம்பிக்கையில் இருந்தனர். நாளுக்கு நாள் காவிரி குடிநீர் திட்ட குழாய்கள் பராமரிப்பின்றி சேதமாவது வாடிக்கையாகி விட்டன.

ஆக.,22 அன்று கல்லல் அருகே செம்பனுாரில் காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய் சேதமடைந்துவிட்டன. அதனை செப்பனிடாததால் வைகை கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து எடுக்கும் 10 லட்சம் லிட்டரை குறைந்த அளவே வீடுகளுக்கு வினியோகித்து வருகின்றனர். குழாய் பழுது காரணமாக சிவகங்கைக்கு தொடர்ந்து 'காவிரி' கை கொடுக்காமல் போனது. இதனால் 6 நாட்களாக குடிநீரின்றி வீடுகளில் தவிக்கின்றனர்.

காவிரி குடிநீர் குழாய் சரிபார்ப்புநகராட்சி கமிஷனர் அய்யப்பன் கூறியதாவது, செம்பனுார் அருகே ஆக.,22 ல் ஏற்பட்ட குழாய் பழுதை நேற்று தான் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் சரி செய்தனர். இன்று முதல் தடையின்றி குடிநீர் வினியோகம் நடக்கும். இது தவிர கூடுதலாக 2.5 லட்சம் லிட்டர் காவிரியில் இருந்து குடிநீர் வர உள்ளது. அது வந்த பின் தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X