பொது செய்தி

இந்தியா

விரைவாக விசாரணை; வருது தடயவியல் ஆய்வகம்

Added : ஆக 28, 2021
Share
Advertisement
பெங்களூரு : குற்ற வழக்குகளின் விசாரணையை விரைந்து முடிக்கும் நோக்கில் கர்நாடகாவில் புதிதாக இரண்டு அதிநவீன தடயவியல் ஆய்வகங்கள் அமைக்க போலீஸ் துறை திட்டமிட்டுள்ளது.இது தொடர்பாக, மாநில கூடுதல் போலீஸ் டி.ஜி.பி., ஹிதேந்திரா கூறியதாவது:குற்றங்களை கண்டுப்பிடிப்பதில், தடயவியல் ஆய்வகங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. கர்நாடக மாநில அளவில், பெங்களூரில் மட்டுமே தடயவியல் ஆய்வகம்

பெங்களூரு : குற்ற வழக்குகளின் விசாரணையை விரைந்து முடிக்கும் நோக்கில் கர்நாடகாவில் புதிதாக இரண்டு அதிநவீன தடயவியல் ஆய்வகங்கள் அமைக்க போலீஸ் துறை திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக, மாநில கூடுதல் போலீஸ் டி.ஜி.பி., ஹிதேந்திரா கூறியதாவது:குற்றங்களை கண்டுப்பிடிப்பதில், தடயவியல் ஆய்வகங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. கர்நாடக மாநில அளவில், பெங்களூரில் மட்டுமே தடயவியல் ஆய்வகம் உள்ளது.தாவணகரே, மங்களூரு,கலபுரகி, மைசூரில் மண்டல ஆய்வகங்கள் உள்ளது. ஆனால் அங்கு,அறிவியல் ரீதியில் பரிசோதனைகள் உள்ளது.

எனவே மடிவாளாவில் உள்ள, மாநில அளவிலான தடயவியல் ஆய்வகத்துக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான மாதிரிகள் வருகின்றன.முந்தைய ஆண்டு 22 ஆயிரம் வழக்குகள் தொடர்பான சாட்சியங்கள், பரிசோதனைக்கு வந்திருந்தன.இந்த ஆய்வகத்தின் மீதான நெருக்கடியை, குறைக்கும் நோக்கில், ஹூப்பள்ளி மற்றும் பல்லாரியில் புதிதாக அதிநவீன தடயவியல் ஆய்வகங்கள் அமைக்கப்படுகிறது.

மாநிலத்தின் அனைத்து போலீஸ் நிலையங்களில் இருந்தும், வழக்குகள் சம்பந்தப்பட்ட மாதிரிகள், இப்புதிய ஆய்வகங்களுக்கு அனுப்பப்படும். பெங்களூரின் தடயவியல் ஆய்வகம் மீதான நெருக்கடிம் குறையும்.வழக்குகளின் விசாரணையை விரைந்து முடித்து, நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும், இப்புதிய ஆய்வகங்கள் உதவியாக இருக்கும்.மாநிலம் முழுவதும் போதைப்பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகளை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்படும் போதைப்பொருட்களின் மாதிரிகள், பெருமளவில் பரிசோதனைக்கு பெங்களூரின் தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பப்படுகிறது. இனி புதிய ஆய்வகங்களுக்கு அனுப்பப்படும்.கர்நாடகாவின் தடயவியல் ஆய்வகங்களை, தொழில்நுட்பரீதியில் வலுப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக குஜராத்தின் அஹமதாபாத்தில் உள்ள தேசிய தடயவியல் ஆய்வகத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.இம்மையத்தின் வல்லுனர்கள், கர்நாடகாவின் தடயவியல் ஆய்வகத்தினருக்கு, பயிற்சியளிப்பர்.இவ்வாறு கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X