குண்டுகள் வெடிப்பதால் மண் சரிவு

Added : ஆக 28, 2021
Share
Advertisement
சிக்கபல்லாபூர் : நந்திமலையில் மண் சரிவுக்கு, வெடிகுண்டு வெடிப்பதே காரணம் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.சிக்கபல்லாபூரில் பொதுவாக ஆண்டு தோறும் 700 - 750 மி.மீ., மழை பெய்வது வழக்கம். ஆனால் ஆகஸ்ட் 25ல் ஒரே நாள் இரவு, 100 மி.மீ., மழை பெய்தது.இரவு முழுதும் பெய்த மழையால், நந்திமலையின் பிரம்மகிரி அருகில் ரங்கப்பா சதுக்கம் என்ற இடத்தில் மண் சரிவு ஏற்பட்டது.மண்

சிக்கபல்லாபூர் : நந்திமலையில் மண் சரிவுக்கு, வெடிகுண்டு வெடிப்பதே காரணம் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

சிக்கபல்லாபூரில் பொதுவாக ஆண்டு தோறும் 700 - 750 மி.மீ., மழை பெய்வது வழக்கம். ஆனால் ஆகஸ்ட் 25ல் ஒரே நாள் இரவு, 100 மி.மீ., மழை பெய்தது.இரவு முழுதும் பெய்த மழையால், நந்திமலையின் பிரம்மகிரி அருகில் ரங்கப்பா சதுக்கம் என்ற இடத்தில் மண் சரிவு ஏற்பட்டது.

மண் சரிவு நடந்த இடத்தை, சுற்றுச்சூழல் வல்லுனர்கள், அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.நந்திமலை சுற்றுப்பகுதிகளில் குவாரி எனப்படும் பாறையை உடைத்து கல் எடுக்கும் தொழில் நடக்கிறது. அதிக சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் மூலம் பாறைகள் தகர்ப்பதாலும், நிலச்சரிவு ஏற்பட்டிருக்கலாம் என, வல்லுனர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X