பொது செய்தி

தமிழ்நாடு

தரமற்ற பேவர் பிளாக் சாலைக்கு எதிர்ப்பு கமிஷனர், போலீசார் சமரசம்

Added : ஆக 28, 2021
Share
Advertisement
சிவகங்கை : சிவகங்கை ஆசாத் தெருவில் தரமற்ற முறையில் நடக்கும் ரூ.10 லட்சம் மதிப்பிலான பேவர் பிளாக் சாலை கட்டும் திட்டத்திற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.இங்குள்ள கான்கிரீட் சாலையின் மேல் பேவர் பிளாக் கற்கள் பதிக்க ரூ.10 லட்சம் திட்டமதிப்பீடு தயார் செய்தனர். பொதுவாக பேவர் பிளாக் கற்கள் பதிக்கும் முன் பழைய சாலையை தோண்டி எடுத்து வீடுகளின் வாசற்படிக்கு கீழ் சாலை அமையும்

சிவகங்கை : சிவகங்கை ஆசாத் தெருவில் தரமற்ற முறையில் நடக்கும் ரூ.10 லட்சம் மதிப்பிலான பேவர் பிளாக் சாலை கட்டும் திட்டத்திற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இங்குள்ள கான்கிரீட் சாலையின் மேல் பேவர் பிளாக் கற்கள் பதிக்க ரூ.10 லட்சம் திட்டமதிப்பீடு தயார் செய்தனர். பொதுவாக பேவர் பிளாக் கற்கள் பதிக்கும் முன் பழைய சாலையை தோண்டி எடுத்து வீடுகளின் வாசற்படிக்கு கீழ் சாலை அமையும் படி போட வேண்டும். ஆனால் ஆசாத் தெருவில் பழைய சாலைகளை தோண்டாமல், அதற்கு மேலேயே பேவர் பிளாக் கற்களை பதித்து வருகின்றனர்.

இதனால் சாலையின் கீழ் வீடுகள் சென்று, மழைக்காலத்தில் சாலையி்ல் ஓடும் மழை நீர் வீட்டிற்குள் புகும் நிலையில் போட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 'பேவர் பிளாக்' கற்கள் பதிக்கும் பணியை தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நகராட்சி கமிஷனர் அய்யப்பன் மழை நீர் வீட்டிற்குள் செல்லாத வகையில் பேவர் பிளாக் சாலையை மாற்றி அமைப்பதாக உறுதி அளித்ததால் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X