பொது செய்தி

இந்தியா

28சுஈMகீசு'ஆன்லைன்' கல்வியால் குழந்தைகள் பாதிப்பு: மருத்துவர்கள் எச்சரிக்கை

Added : ஆக 28, 2021
Share
Advertisement
பெங்களூரு : ஆன்லைன் கல்வியால் குழந்தைகளிடம் மொபைல் பயன்பாடு அதிகமாகி வருவதால், 'மயோபியா' எனப்படும் கண்நோய் பாதிப்பு ஏற்படுவதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.கடந்த இரண்டாண்டாக மாணவர்கள் ஆன்லைனில் கல்வி கற்கின்றனர். கொரோனா தடுப்பு வழிமுறையாக, உயர்நிலை மாணவர்கள் மட்டுமே பள்ளி செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். முன்பருவ கல்வி வகுப்பு படிக்கும் கிண்டர் கார்டன்

பெங்களூரு : ஆன்லைன் கல்வியால் குழந்தைகளிடம் மொபைல் பயன்பாடு அதிகமாகி வருவதால், 'மயோபியா' எனப்படும் கண்நோய் பாதிப்பு ஏற்படுவதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

கடந்த இரண்டாண்டாக மாணவர்கள் ஆன்லைனில் கல்வி கற்கின்றனர். கொரோனா தடுப்பு வழிமுறையாக, உயர்நிலை மாணவர்கள் மட்டுமே பள்ளி செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். முன்பருவ கல்வி வகுப்பு படிக்கும் கிண்டர் கார்டன் குழந்தைகள் முதல், நடுநிலை வகுப்பு படிக்கும் மாணவர்கள் வரை, ஆன்லைன் கல்வி தான் இப்போதைய சூழலாக உள்ளது.

ஆன்லைன் கல்விக்கு, கம்ப்யூட்டரை விட மொபைல் பயன்பாடு தேவை என்பதால் குழந்தைகள் நாள்தோறும் மொபைல் பார்க்கின்றனர்.சில பள்ளிகளில் காலை முதல் மாலை வரையிலும் ஆன்லைன் வகுப்புகள் நடப்பதால், தொடர்ந்து மாணவர்கள் மொபைல் பார்க்கின்றனர்.

இயல்பாகவே, அதிக நேரம் இதுபோன்ற, 'டிஜிட்டல்' திரைகளை பார்ப்பவர்களுக்கு கண்நோய் பாதிப்பு வருகிறது. இந்நிலையில் மாணவர்களும் கண்பாதிப்புகளுக்கு ஆளாகி வருவது அதிகரிப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பெங்களூரு அகர்வால் மருத்துவமனை டாக்டர் ராகேஷ் சீனப்பா கூறியதாவது:அதிகமான கம்ப்யூட்டர் பணிநேரத்தால், பெரியவர்கள், இளைஞர்கள் கூட எளிதில் கண்பாதிப்புகளுக்கு ஆளாகி விடுகின்றனர். இந்நிலையில், குழந்தைகள் வளரும் பருவத்தில், டிஜிட்டல் திரைகளை அதிகமாக பார்ப்பது பார்வை குறைபாட்டை ஏற்படுத்துகிறது.

சத்து குறைபாடு மற்றும் தலைமுறையில் இருக்கும் பாதிப்புகளால் சிலருக்கு குழந்தை பருவத்தில் பார்வை குறைபாடு வருவது வழக்கம்.கடந்த ஓராண்டாக, இத்தகைய குறைபாடு எதுவும் இல்லாமல் கண்நோய் பாதிப்பால் சிகிச்சை பெற வருவோரின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. உணவு முறையில் பெற்றோர் கவனம் செலுத்த வேண்டும்.

தொடர்ந்து மொபைல் பயன்பாடு இல்லாமல் இடையிடையே சிறிது நேரம் இடைவெளி இருப்பது அவசியம். கண்களுக்கான பயிற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.பெற்றோர் கண்டு கொள்ளாமல் விட்டால், பாதிப்பு தீவிரமடைவதற்கும் வாய்ப்புள்ளது. முன்னெச்சரிக்கையான நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X