போலீஸ் செய்திகள்

Added : ஆக 28, 2021
Share
Advertisement
'லேப்டாப்' பணம் ரூ.1.33 லட்சம் மோசடிசைபர் கிரைம் விசாரணைசிவகங்கை: காரைக்குடி அருகே வடக்கு பாரிநகர் ஜஸ்டின் கிரிகோரி மகள் வினிதா 19. இவர் அழகப்பா அரசு இன்ஜி., கல்லுாரியில் பி.இ., 2ம் ஆண்டு படிக்கிறார். ஆன்லைன் வகுப்பிற்காக லேப்டாப் வாங்க முடிவு செய்தார். இதற்காக ஆன்லைனில் ஆர்டர் கொடுத்து தனியார் இணைய தள முகவரியில் பெற ஏப்.17ம் தேதி முதற்கட்டமாக ஆன்லைனில் ரூ.26,000 செலுத்தினார்.

'லேப்டாப்' பணம் ரூ.1.33 லட்சம் மோசடி
சைபர் கிரைம் விசாரணை
சிவகங்கை: காரைக்குடி அருகே வடக்கு பாரிநகர் ஜஸ்டின் கிரிகோரி மகள் வினிதா 19. இவர் அழகப்பா அரசு இன்ஜி., கல்லுாரியில் பி.இ., 2ம் ஆண்டு படிக்கிறார். ஆன்லைன் வகுப்பிற்காக லேப்டாப் வாங்க முடிவு செய்தார். இதற்காக ஆன்லைனில் ஆர்டர் கொடுத்து தனியார் இணைய தள முகவரியில் பெற ஏப்.17ம் தேதி முதற்கட்டமாக ஆன்லைனில் ரூ.26,000 செலுத்தினார். ஆனால் காஷ்மீரில் இருந்து 'லேப்டாப்' வருவதால் அனுமதி பெற மீண்டும் ரூ.1.07 லட்சம் செலவாகும் என கேட்டுள்ளனர். ஒட்டு மொத்தமாக ரூ.1.33 லட்சம் பெற்று பல மாதங்களாகியும் லேப்டாப் வழங்கவில்லை. பணத்தை கேட்டபோதும் தரவில்லை. இது குறித்து வினிதா சிவகங்கை எஸ்.பி., செந்தில்குமாரிடம் புகார் செய்தார். அவரது பரிந்துரைப்படி சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், எஸ்.ஐ., சபரிராஜன் ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.

லாரி மீட்பு: இருவர் கைது சிவகங்கை: சிவகங்கை பகத்சிங் தெரு லாரி உரிமையாளர் சோமசுந்தரம் 32. ஆக.,11 அன்று சரக்கு ஏற்றி விட்டு மீண்டும் சிவகங்கை வந்த லாரியை அதன் டிரைவர் பிள்ளைவயல் காளி கோயில் ஆர்ச் அருகே நிறுத்தி சாவியை உரிமையாளரிடம் ஒப்படைத்து சென்றார். ஆக.,19 அன்று பார்த்தபோது ரூ.6 லட்சம் மதிப்புள்ள லாரியை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி, எஸ்.ஐ., மருதுபாண்டி வழக்கு பதிந்தனர். தனிப்படை போலீசார் மதுரையில் பதுக்கி வைத்த லாரியை பறிமுதல் செய்து திருப்பரங்குன்றம் பாம்பன் சுவாமி நகர் சதீஷ்குமார் 31, சூர்யா 18, ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

தொடர் திருட்டு: வாலிபர் கைது

சிங்கம்புணரி: எஸ்.புதூர் ஒன்றியத்தில் சில மாதங்களாக வீடுகளில் தொடர் திருட்டு நடந்தது. இதுகுறித்து விசாரணை நடந்து வந்த நிலையில் உலகம்பட்டி போலீஸ் எஸ்.ஐ., மாரிமுத்து, திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதாக புல்லாம்பட்டியைச் சேர்ந்த சந்தோஷ் 19, என்பவரை பிடித்து விசாரித்தார். அவரிடம் நடத்திய விசாரணையில், வலசைபட்டி ஊராட்சி துணைத்தலைவர் ரமேஷின் மகனான சந்தோஷ், தனது நண்பர்கள் குளத்துப்பட்டி பாரதிராஜா, திருச்சி வெள்ளியங்குடிபட்டி சுதாகர் ஆகியோருடன் சேர்ந்து மாயாண்டிபட்டி, புல்லாம்பட்டி, எஸ்.புதூர், கிழவயல், பூலாங்குறிச்சியில் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. சந்தோஷை கைது செய்து 20 பவுன் நகையை மீட்டனர்.

மணல் திருடிய இருவர் கைது

மானாமதுரை: மானாமதுரை அருகே கீழ கொம்புக்காரனேந்தல் அருகே 2 மாட்டு வண்டிகளில் பூலாங்குளத்தைச் சேர்நத குமார், கீழ கொம்புக்காரனேந்தல் ஜெகநாதன் ஆகியோர் அனுமதியின்றி மணல் திருடிச்சென்றனர். மாங்குளம் வி.ஏ.ஓ.,மகேந்திரவர்மன் புகாரில் போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

டிராக்டர் மோதி விவசாயி பலி

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே வகுத்தெழுவன்பட்டி விவசாயி பாலு மகன் குமார் 32. இவர் ஆக., 26ம் தேதி இரவு 8:00 மணிக்கு சிங்கம்புணரியில் இருந்து டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) ஊருக்கு சென்றார். பருகுபட்டி அருகே தேங்காய் ஏற்றிவந்த டிராக்டர் டூவீலரில் மோதியதில் குமார் பலியானார். போலீசார் விசாரிக்கின்றனர்.

செயின் பறிப்பு: ஒருவர் கைது

காரைக்குடி: காரைக்குடி கே.கே., நகர் முத்தையா மனைவி சிவகாமி 70. ஆக.,15 ம் தேதி வீட்டிற்குள் இருந்த போது மர்ம நபர் வீட்டிற்குள் நுழைந்து 5 பவுன் செயினை வழிப்பறி செய்து தப்பினர். குன்றக்குடி போலீசார் விசாரித்து செயின் வழிப்பறியில் ஈடுபட்ட சாலியை சேர்ந்த சின்ராசு 28 என்பவரை கைது செய்து 5 பவுன் செயினை பறிமுதல் செய்தனர்.லாட்டரி விற்ற இருவர் கைதுகாரைக்குடி: காரைக்குடி அண்ணா மார்க்கெட்டில் போலீசார் ரோந்து சென்றனர். அங்கு நம்பர் லாட்டரி விற்று வந்த கரந்தமலை மகன் சந்திரன் 44, வெள்ளைக்கண்ணு மகன் ராமச்சந்திரன் 51, ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து அலைபேசி, லாட்டரி விற்ற ரூ.1800 பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X