அரசு மீதான வழக்குகள் அதிகரிப்பு ஆந்திராவில் அன்றாட பணி பாதிப்பு

Updated : ஆக 28, 2021 | Added : ஆக 28, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
அமராவதி: அவமதிப்பு வழக்குகளால், ஆந்திர மாநில அரசு நிர்வாகம் கடும் தள்ளாட்டத்தில் சிக்கியுள்ளது. வழக்கமான அரசுப் பணிகளை செய்வதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, ஆந்திர அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஆந்திர அரசு மீது உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் மற்றும் இதர
அரசு மீதான வழக்குகள் அதிகரிப்பு ஆந்திரா,அன்றாடம்,  பணி பாதிப்பு

அமராவதி: அவமதிப்பு வழக்குகளால், ஆந்திர மாநில அரசு நிர்வாகம் கடும் தள்ளாட்டத்தில் சிக்கியுள்ளது. வழக்கமான அரசுப் பணிகளை செய்வதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, ஆந்திர அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஆந்திர அரசு மீது உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் மற்றும் இதர நீதிமன்றங்களில் 1.94 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன.


latest tamil news




இதுதவிர, நாளொன்றுக்கு சராசரியாக 450 புதிய வழக்குகள் தாக்கல் ஆகின்றன.இந்த வழக்குகளுக்கு தேவைப்படும் ஆவணங்களை தயார் செய்ய 40 ஆயிரம் பக்கங்கள் வேலை இருக்கும். இதனால் அரசின் வழக்கமான பணிகளை மேற்கொள்வதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுகளை உடனுக்குடன் செயல்படுத்த முடியாமல் சில அதிகாரிகள் 8,000 அவமதிப்பு வழக்குகளுக்கு ஆளாகிஉள்ளனர்.
இது குறித்து அம்மாநில முன்னாள் அரசு தலைமை வக்கீல் தம்மலபதி ஸ்ரீனிவாஸ் கூறியதாவது, 'முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அரசின் தவறான கொள்கையால் அரசின் மீதான வழக்குகள் 30 சதவீதம் அதிகரித்துள்ளன' . இதில் அரசு நிர்வாகம், அரசின் கொள்கை முடிவு மற்றும் பென்ஷன் ஆகியவற்றுக்கு எதிராகத் தான் அரசு மீது ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. . நிலுவையில் இருக்கும் வழக்குகளால் அரசின் அன்றாட பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DVRR - Kolkata,இந்தியா
28-ஆக-202115:51:34 IST Report Abuse
DVRR கிருத்துவன் கிறித்துவனாக மட்டுமே இந்து எதிர்ப்பாளனாக செயல்படுகின்றன என்று தான் வழக்குகளின் சாரமே
Rate this:
Cancel
oce -  ( Posted via: Dinamalar Android App )
28-ஆக-202107:50:31 IST Report Abuse
oce தமிழக அரசுக்கு கடன் சுமை. ஆந்திர அரசுக்கு வழக்கு சுமை. மற்ற மாநில ஆட்சிகளில் உள்ள சுமைகளை யார் கண்டு பிடிப்பது.
Rate this:
Cancel
தமிழ் எனது உயிர் - Kabul,ஆப்கானிஸ்தான்
28-ஆக-202107:02:39 IST Report Abuse
தமிழ் எனது உயிர் அவன் மதம் பார்த்து தான ஓட்டு போட்டீங்க அரசு அதிகாரிகளே இன்று அவன் நிம்மதியா துங்குவான் நீங்க போ ஓட்டை திரும்ப கேட்டு பாருங்க கொடுப்பானா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X