இன்றைய 'கிரைம் ரவுண்ட் அப்'

Updated : ஆக 28, 2021 | Added : ஆக 28, 2021
Share
Advertisement
தமிழக நிகழ்வுகள்உறவினர் கொலை: தாய், மகன் கைதுநாகர்கோவில்: குமரி மாவட்டம், குலசேகரம் அருகே தும்பகோட்டையைச் சேர்ந்த சகோதரர்கள் ராஜன் 44; சுரேஷ், 35. திருமணமாகி தனித்தனியே வசிக்கின்றனர். ராஜன் வெளிநாட்டில் வேலை செய்கிறார். சமீபத்தில் இவர்களது தாயார் இறந்தார். நேற்று முன்தினம் இரவு ராஜன் வீட்டுக்கு சென்ற சுரேஷ் குடிபோதையில் தகராறு செய்தார். ஆத்திரமடைந்த
Crime, Crime Roundup, Murder, கிரைம், க்ரைம், ரவுண்ட், அப், தமிழக, இந்திய, உலக, நிகழ்வுகள்,


தமிழக நிகழ்வுகள்உறவினர் கொலை: தாய், மகன் கைது


நாகர்கோவில்: குமரி மாவட்டம், குலசேகரம் அருகே தும்பகோட்டையைச் சேர்ந்த சகோதரர்கள் ராஜன் 44; சுரேஷ், 35. திருமணமாகி தனித்தனியே வசிக்கின்றனர். ராஜன் வெளிநாட்டில் வேலை செய்கிறார். சமீபத்தில் இவர்களது தாயார் இறந்தார். நேற்று முன்தினம் இரவு ராஜன் வீட்டுக்கு சென்ற சுரேஷ் குடிபோதையில் தகராறு செய்தார். ஆத்திரமடைந்த ராஜன் மனைவி விஜிலா, 42, சுரேஷ் மீது வெந்நீர் ஊற்றினார். தொடர்ந்து தகாத வார்த்தையால் திட்டியதால் ராஜன் மகன் ரியாஸ், 19, சுரேஷை 20 முறை கத்தியால் குத்தி கொலை செய்தார். குலசேகரம் போலீசார் விஜிலா, ரியாஸ் ஆகியோரை கைது செய்தனர்.


'ஆப்' டவுன்லோடு செய்ய சொல்லி வியாபாரியின் ரூ.92,000 திருட்டு


ஐஸ்ஹவுஸ் : திருவல்லிக்கேணி, குதிரத்தலிமக்கான் தெருவைச் சேர்ந்தவர் பாட்ஷா, 30; வியாபாரி. நேற்று முன்தினம் இரவு, இவரது மொபைல் போனில் தொடர்பு கொண்டவர், வங்கியிலிருந்து பேசுவதாக கூறி, ரகசிய எண்ணை பெற்றுள்ளார். சிறிது நேரத்திலேயே, பாட்ஷாவின் வங்கிக் கணக்கிலிருந்த, 92 ஆயிரம் ரூபாயை, 'ஆன்லைன்' வாயிலாக மர்ம நபர் திருடியுள்ளார்.அப்போது தான், ஏமாற்றப்பட்டது பாட்ஷாவிற்கு தெரிய வந்தது. இது குறித்து, மயிலாப்பூர் போலீசாரிடம் பாட்ஷா புகாரளித்தார். புகாரின்படி, மர்ம நபர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


வீடு 'லீசு'க்கு விடுவதாக ரூ.6.40 லட்சம் மோசடி?


ஐஸ்ஹவுஸ் : திருவல்லிக்கேணி, டாக்டர் நடேசன் சாலை, பி.பி., சாலை மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர் ஆதிலட்சுமி, 36; கேட்டரிங் தொழில் செய்கிறார்.கடந்த மாதம், சுதந்திரா நகர் ஒன்றாவது தெருவைச் சேர்ந்த தேவி என்பவர், வீடு லீசுக்கு விடுவதாக கூறியதை அடுத்து, ஆதிலட்சுமி லீசுக்கு வீடு கேட்டுள்ளார். அதற்கான தொகை, 6.40 லட்சம் ரூபாயை, தேவியிடம் கொடுத்து உள்ளார். ஆனால், சொன்னப்படி ஆதிலட்சுமிக்கு வீட்டை லீசுக்கு விடாமலும், கொடுத்த பணத்தை திருப்பி தராமலும், தேவி அலைக்கழிக்க வைத்து உள்ளார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.


மின்சாரம் தாக்கி குழந்தை மரணம்


காங்கேயம் : திண்டுக்கல்லை சேர்ந்தவர் ரஞ்சித், 24; இவரது மனைவி பச்சையம்மாள், 21. சக்திதேவி (எட்டு மாதம்) என்ற மகள் உள்ளார். ரஞ்சித், காங்கயம் சிவன்மலை பகுதியில் ஒரு தேங்காய் களத்தில் வேலை செய்கிறார். அப்பகுதியில் உள்ள குடியிருப்பில் வசிக்கின்றனர். நேற்று காலை 7:00 மணியளவில் ரஞ்சித் தேங்காய் களத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். பச்சயைம்மாள் வீட்டினுள் சமைத்துக் கொண்டிருந்தார். வீட்டினுள் தவழ்ந்து விளையாடி கொண்டிருந்த குழந்தை சக்திதேவி, கீழே கிடந்த மின்சார ஜங்சன் பாக்சை பிடித்து இழுத்தது. எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி குழந்தை அதே இடத்தில் உயிரிழந்தது. காங்கேயம் போலீசார் விசாரிக்கின்றனர்.


ரயிலில் அடிபட்டு இளைஞர்கள் பலி


சென்னை : சைதாப்பேட்டை, கோதாமேட்டைச் சேர்ந்த கவுதம், 19. தனியார் கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். இதே பகுதியைச் சேர்ந்த நண்பர் உதயா, 18, என்பவருடன், நேற்று முன்தினம் இரவு சைதாப்பேட்டை ரயில்வே சுரங்கப்பாதை அருகில், ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது, தாம்பரத்தில் இருந்து சென்னை தண்டையார்பேட்டைக்கு சென்ற சரக்கு ரயிலில் அடிபட்டு, சம்பவ இடத்திலேயே கவுதம் இறந்தார். ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட உதயா, நேற்று உயிரிழந்தார். விபத்து குறித்து, மாம்பலம் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.


ரூ. 2,000 லஞ்சம் வாங்கிய எஸ்.ஐ., ஏட்டு சிறையிலடைப்பு


கோவை : கோவை சரவணம்பட்டியில் ஆயில் ஸ்டோர் வைத்திருப்பவர் ஐயப்பன். வாகனங்களில் பயன்படுத்திய இன்ஜின் ஆயிலை விற்பனை செய்துள்ளார். இவரிடம் கீரணத்தம் குடிமைப் பொருள் வழங்கல் சிறப்பு பிரிவின் போலீஸ் ஏட்டு ராஜ்குமார், 40, வழக்கு பதியாமல் இருக்க ரூ. 2,000 லஞ்சம் மற்றும் மாதந்தோறும், ரூ.1,000 மாமூல் வழங்க வேண்டும் என தெரிவித்தார். கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையில் ஐயப்பன் அளித்த புகாரின் அடிப்படையில், ஏட்டு ராஜ்குமார் ரூ. 2,000 லஞ்சம் வாங்கும்போது லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். உடந்தையாக இருந்த எஸ்.ஐ., இருளப்பனும் கைது செய்யப்பட்டார். விசாரணைக்கு பின் லஞ்ச ஒழிப்பு நீதிமன்ற நீதிபதி(பொறுப்பு) செல்லதுரை இருவரையும், 15 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து இருவரும், ஈரோடு மாவட்டம், பெருந்துறை சிறையில் அடைக்கப்பட்டனர்.


ரூ.10 லட்சம் பறித்த வழக்கு: இன்ஸ்பெக்டர் வசந்தி கைது


மதுரை : சிவகங்கை மாவட்டம், இளையாங்குடியைச் சேர்ந்தவர் அர்ஷத், 32; பேக் வியாபாரி. பணத்தை இரட்டிப்பாக்கும் ஆசையில், 10 லட்சம் ரூபாயுடன், ஜூலை 5ல் மதுரை நாகமலை புதுக்கோட்டை வந்தார். இதையறிந்த இன்ஸ்பெக்டர் வசந்தி, 35 மற்றும் அர்ஷத்தை ஆசை வார்த்தை கூறி அழைத்து வந்த பால்பாண்டி, பாண்டியராஜன், உக்கிரபாண்டி, சீமைச்சாமி ஆகியோர் பணத்தை பறித்தனர். ஜூலை 27ல் அர்ஷத் புகார்படி, குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் வசந்தி, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். வசந்தி தவிர மற்றவர்கள் கைதான நிலையில், முன்ஜாமின் கேட்டு உயர் நீதிமன்ற கிளையில் வசந்தி மனு செய்தார். 'வசந்தியை கைது செய்யாதது ஏன்' என ஆக., 23ல் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.


latest tamil newsஇந்திய நிகழ்வுகள்கூட்டு பாலியல் பலாத்காரம்: தமிழக, கேரள மாணவர்கள் மீது சந்தேகம்


மைசூரு : மைசூரு நகரில் எம்.பி.ஏ., மாணவியை கும்பலாக பாலியல் பலாத்காரம் செய்தவர்கள், தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த மாணவர்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மைசூரு நகரில் எம்.பி.ஏ., படித்து கொண்டிருந்த, 23 வயது மாணவி ஒருவர், தன் ஆண் நண்பருடன், கடந்த 24 இரவில், சாமுண்டி மலை அடிவாரத்தில் பேசி கொண்டிருந்தார். அப்போது, ஆறு பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். தடுக்க முயன்ற ஆண் நண்பரும் தாக்கப்பட்டார்.இருவரும் மைசூரு மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.


முதல்வருக்கு நெஞ்சுவலி


ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் முதல்வரும், காங்., மூத்த தலைவருமான அசோக் கெலாட், 70, சமீபத்தில் கடும் நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்டார். ஜெய்ப்பூர் அரசு மருத்துவமனையில் அவருக்கு இதய ரத்தக்குழாயில் ஏற்பட்ட அடைப்பை நீக்கும் 'ஆஞ்சியோபிளாஸ்டி' சிகிச்சை அளிக்கப்பட்டது. முதல்வரின் 'டுவிட்டர்' பதிவில், 'நான் நலமுடன் உள்ளேன். உங்கள் ஆசிகள் என்னுடன் உள்ளன' என, கூறி உள்ளார். கெலாட் விரைவில் குணம் பெற பிரார்த்திப்பதாக, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


கைதுக்கு தடை இல்லை


புதுடில்லி: டில்லி ஜந்தர் மந்தரில் சமீபத்தில் நடந்த ஒரு போராட்டத்தில் இளைஞர்களிடையே மத ரீதியிலான பிரச்னையை துாண்டும் வகையில் கோஷம் எழுப்பியதாக ஹிந்து ரக் ஷா தளம் அமைப்பின் தலைவர் பூபிந்தர் தோமர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர். இந்த வழக்கில் தன்னை கைது செய்ய தடை கோரி டில்லி உயர் நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார். மனுவை நேற்று விசாரித்த நீதிமன்றம் கைதுக்கு தடை விதிக்க மறுத்ததுடன், இது குறித்து டில்லி போலீசார் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தது.


மோசடி அதிகாரிகள் 'சஸ்பெண்ட்'


டேராடூன்: உத்தரகண்டின் ஹரித்துவாரில் கும்பமேளாவை அடுத்து தனியார் ஆய்வகங்கள் வாயிலாக லட்சக்கணக்கானோருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது அதிக எண்ணிக்கையில் பரிசோதனை நடத்தியதாக போலி கணக்கு தாக்கல் செய்து, அரசு நிதியில் மோசடி நடந்ததாக புகார் எழுந்தது. விசாரணை முடிவில் கும்பமேளாவிற்கான சுகாதார அதிகாரி டாக்டர் அர்ஜுன் சிங் செங்கர் மற்றும் டாக்டர் என்.கே.தியாகி ஆகியோர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.


உலக நிகழ்வுகள்டாம் க்ரூஸ் கார் திருட்டு


பர்மிங்காம் : ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் பிரிட்டன் நாட்டில் படப்பிடிப்பில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் பி.எம்.டபிள்யூ எக்ஸ் 7 என்ற கார் திருப்பட்டது. மேலும் ஆயிரம் பவுண்ட்ஸ் மதிப்புள்ள அவரது உடமைகள் திருடப்பட்டுள்ளன. இந்த சம்பவம் அங்குள்ள பர்மிங்காம் பகுதியில் நடந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டாம் க்ரூஸின் வாகனத்தில் மின்னணு கண்காணிப்பு கருவி பொருத்தப்பட்டதால் காவல்துறையினர் வாகனத்தை மீட்டனர். கார் மீட்கப்பட்டு இருந்தாலும் அதில் இருந்த உடமைகள் அனைத்தும் திருடப்பட்டுள்ளன.


நடிகைக்கு ரூ.340 கோடி அபராதம்


சீனாவைச் சேர்ந்த பிரபல நடிகை ஜெங் ஷூவாங்க், வருமான வரி ஏய்ப்பு செய்ததாக 340 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. நடிகையின் முன்னாள் கணவர் இவரை சிக்கவைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X