பொது செய்தி

தமிழ்நாடு

சில வரி செய்தி:கோவாவுக்கு விமானம்

Added : ஆக 28, 2021
Share
Advertisement
கோவையிலிருந்து கோவா செல்ல, விமான போக்குவரத்தை அக்டோபரில் துவக்க, இண்டிகோ திட்டமிட்டுள்ளது. சுற்றுலா தலமான கோவாவுக்கு செல்ல, கோவை பயணிகள் தரை வழி போக்குவரத்தையே பயன்படுத்துகின்றனர். எனவே, கோவா செல்ல நேரடி விமான போக்குவரத்தை, அறிமுகம் செய்ய இண்டிகோ விமான சேவை நிறுவனம், திட்டமிட்டு வருகிறது. வரும் அக்., 31 முதல் இந்த விமானம், நள்ளிரவில் இயக்கப்படவுள்ளது.இளைஞர் மன்றம்

கோவையிலிருந்து கோவா செல்ல, விமான போக்குவரத்தை அக்டோபரில் துவக்க, இண்டிகோ திட்டமிட்டுள்ளது. சுற்றுலா தலமான கோவாவுக்கு செல்ல, கோவை பயணிகள் தரை வழி போக்குவரத்தையே பயன்படுத்துகின்றனர். எனவே, கோவா செல்ல நேரடி விமான போக்குவரத்தை, அறிமுகம் செய்ய இண்டிகோ விமான சேவை நிறுவனம், திட்டமிட்டு வருகிறது. வரும் அக்., 31 முதல் இந்த விமானம், நள்ளிரவில் இயக்கப்படவுள்ளது.

இளைஞர் மன்றம் கோரிக்கை

கண்ணம்பாளையத்தில் அனைத்து இந்திய இளைஞர் பெருமன்றத்தின், சூலூர் தெற்கு வட்ட பேரவை கூட்டம் நடந்தது. சூலுார் வட்டத் தலைவர் பிரசாத் தலைமை வகித்தார். சூலுார் பகுதியில் அரசு கலைக்கல்லுாரி துவங்க வேண்டும், குளங்கள் பராமரிப்பு மற்றும் அரசு நிலங்களில், மரம் வளர்ப்பு உள்ளிட்ட பணிகளுக்கு, அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் போன்ற, பொது நல அமைப்புகளுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும், என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பிறந்த நாள் வழிபாடு

கிருபானந்த வாரியார் பிறந்த நாளையொட்டி, சக்தி பீடத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு,சிறப்பு வழிபாடு நடந்தது. கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் மற்றும்குருகுல மாணவர்கள், சிறப்பு வழிபாடு நடத்தி, அவரது புகழ் பாடினர்.புத்தாக்க பயிற்சி கோவை சர்க்கார் சாமக்குளம் வட்டார பகுதிகளில் உள்ள, ரேஷன் கடை பணியாளர்களுக்கான புத்தாக்க பயிற்சி, சரவணம்பட்டியில் நடந்தது. இந்த பயிற்சியில் யோகா, உடற்பயிற்சிகள், மன அழுத்தத்தைத் தவிர்க்கும் முறைகள் குறித்து, விளக்கம் தரப்பட்டது. மாவட்ட பொதுவிநியோகத் திட்ட துணைப் பதிவாளர் அர்த்தநாரீஸ்வரன், கூட்டுறவு சார்பதிவாளர் விமல்ராஜ், கூட்டுறவு சார்பதிவாளர் (ஓய்வு) சிவக்குமார் மற்றும் சர்க்கார் சாமகுளம் பொதுவிநியோகத் திட்ட பணியாளர்கள் 75 பேர் பங்கேற்றனர்.

தொழில்முனைவோர் பயிற்சி

தமிழ்நாடு வேளாண் பல்கலை வணிக முறையிலான, காய்கறி மற்றும் பழங்கள் தயாரித்தல் பயிற்சி செப்.,7, 9 ஆகிய இரண்டு நாட்கள் நடக்கவுள்ளன.இப்பயிற்சி வகுப்பில், உலர வைக்கப்பட்ட காய்கறி, பழங்கள், பலவகை பழ ஜாம், பழரசம், தயார் நிலை பானம், ஊறுகாய், தக்காளி கெட்சப், ஊறுகனி, பழப்பார், உள்ளிட்டவை தயாரிக்க கற்றுத்தரப்படும்.ஆர்வமுள்ளவர்கள், 1500 ரூபாய் மற்றும் 18 சதவீத ஜி.எஸ்.டி., செலுத்தி பெயர்களை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். விபரங்களுக்கு, 0422-6611268/6611340 ஆகிய எண்களை, தொடர்பு கொள்ளலாம்.

மரக்கன்று நடும் நிகழ்ச்சி
போத்தனூர் அடுத்த செட்டிபாளையத்தில், 1.77 ஏக்கர் பரப்பில், போலீஸ் ஸ்டேஷன் அமைந்துள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு முன், இப்பரப்பு முழுவதையும் சுற்றி கல் நட்டு, கம்பி வேலி போடப்பட்டது. தொடர்ந்து நேற்று புங்கை, கொய்யா, மா, பலா உள்ளிட்ட 100 மரக்கன்றுகளை, எஸ்.ஐ., செந்தில்குமார் மற்றும் போலீசார் நட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X