பொது செய்தி

தமிழ்நாடு

ஏழு என்.டி.சி., ஆலைகளையும் இயக்குங்கள்! மில் தொழிலாளர் சங்கம் வேண்டுகோள்

Added : ஆக 28, 2021
Share
Advertisement
கோவை:கோவை ஜில்லா மில் தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகக் குழு கூட்டம், காட்டூரில் உள்ள சங்க அலுவலகத்தில் நடந்தது. சங்க துணைத் தலைவர் சுப்ரமணியம் தலைமையில் நடந்த கூட்டத்தில், பொதுச்செயலாளர் ஆறுமுகம், உடுமலை, திருப்பூர் பகுதிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், தமிழகத்தில் இயங்கி வரும் ஏழு என்.டி.சி., ஆலைகளையும்உடனடியாக இயக்கி, அனைத்து தொழிலாளர்களுக்கும்

கோவை:கோவை ஜில்லா மில் தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகக் குழு கூட்டம், காட்டூரில் உள்ள சங்க அலுவலகத்தில் நடந்தது. சங்க துணைத் தலைவர் சுப்ரமணியம் தலைமையில் நடந்த கூட்டத்தில், பொதுச்செயலாளர் ஆறுமுகம், உடுமலை, திருப்பூர் பகுதிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், தமிழகத்தில் இயங்கி வரும் ஏழு என்.டி.சி., ஆலைகளையும்உடனடியாக இயக்கி, அனைத்து தொழிலாளர்களுக்கும் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். வேலை வழங்காத காலம் முழுமைக்கும், முழு ஊதியம்வழங்க வேண்டும். கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து, அனைத்து தொழிற்சங்க தலைவர்களையும் அழைத்து கலந்து ஆலோசித்து, அனைத்து என்.டி.சி., ஆலைகளையும், மத்திய அரசு இயக்க வைக்க நடவடிக்கைமேற்கொள்ள வேண்டும்.இதற்கான கூட்டத்தை, கோவையில் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது. 21 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஊதியம் பெறும் தொழிலாளர்களுக்கு, உச்சவரம்பின் அடிப்படையில் இ.எஸ்.ஐ., பிடித்தம் செய்வது, சட்டப்படி தடைபட்டுள்ளது.இதனால், தொழிலாளர்கள், அவர்களது குடும்பத்தினர் தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியாத நிலை உள்ளது. மத்திய அரசு இ.எஸ்.ஐ., உச்சவரம்பை, 35 ஆயிரம் வரை நீட்டித்து, சட்டத் திருத்தம் செய்ய வேண்டும்.அவ்வாறு சட்டத் திருத்தம் செய்யும் வரை, ஆலை நிர்வாகங்களே தொழிலாளர்களுக்கு ஏற்படும் மருத்துவ செலவு முழுவதையும் ஏற்கவேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் தீர்மானங்களாகநிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X