பொது செய்தி

இந்தியா

பி.எஸ்.எல்.வி., ராக்கெட் தயாரிப்பு போட்டியில் 'அதானி' குழுமம்

Updated : ஆக 28, 2021 | Added : ஆக 28, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி : செயற்கைகோளை ஏவுவதற்கான வாகனமான, 'பி.எஸ்.எல்.வி., ராக்கெட்' தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை கைப்பற்ற, 'அதானி குழுமம்' உள்ளிட்ட மூன்று நிறுவனங்கள் போட்டியில் இறங்கி உள்ளன.ஒப்பந்தம்அதானி குழுமத்தின் தலைமையிலான கூட்டமைப்பு, எல் அண்டு டி., தலைமையிலான கூட்டமைப்பு, பி.எச்.இ.எல்., ஆகியவை போட்டி போடுகின்றன. மொத்தம் 5 ராக்கெட்டுகளை தயாரிப்பதற்கான
PSLV, ISRO, Adani, Research, Production, L and T, rocket

புதுடில்லி : செயற்கைகோளை ஏவுவதற்கான வாகனமான, 'பி.எஸ்.எல்.வி., ராக்கெட்' தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை கைப்பற்ற, 'அதானி குழுமம்' உள்ளிட்ட மூன்று நிறுவனங்கள் போட்டியில் இறங்கி உள்ளன.


ஒப்பந்தம்


அதானி குழுமத்தின் தலைமையிலான கூட்டமைப்பு, எல் அண்டு டி., தலைமையிலான கூட்டமைப்பு, பி.எச்.இ.எல்., ஆகியவை போட்டி போடுகின்றன. மொத்தம் 5 ராக்கெட்டுகளை தயாரிப்பதற்கான ஒப்பந்தமாகும். இது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஐ.எஸ்.ஆர்.ஓ.,வுக்கு வெளியே உள்ள நிறுவனங்கள், முதன் முதலாக செயற்கை கோளை ஏவுவதற்கான வாகனத்தை ஆரம்பம் முதல் முடிவு வரை, முற்றாக தயாரிக்க உள்ளன.இந்த ஆண்டு இறுதியில் ஒப்பந்தத்துக்கான நிறுவனம் தேர்ந்தெடுக்கப்படும் என தெரிகிறது.


latest tamil news



மூன்று நிறுவனங்கள்


மேற்சொன்ன மூன்று நிறுவனங்களும், கடந்த ஜூலை இறுதியில் தங்களுடைய ஒப்பந்த புள்ளிகளை சமர்ப்பித்தன. வெளி நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்களை வழங்குவதன் வாயிலாக, வரும் ஆண்டுகளில் அதிக எண்ணிக்கையிலான செயற்கை கோள்கள் விண்ணில் ஏவப்பட வாய்ப்பு உள்ளது.


Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
28-ஆக-202114:35:49 IST Report Abuse
pradeesh parthasarathy அதானி நிறுவனத்திற்கு எந்த முன் அனுபவம் உள்ளது .. ? அரசு பொதுத்துறை நிறுவனமான முன் அனுபவமா வாய்ந்த பி.எச்.இ.எல் நிறுவனத்த்திற்கு கொடுக்க மாட்டர்கள் என்பதை இப்போவே சொல்லிவிட்டீர்கள் ... இதுவும் மற்றொரு ரபேல் ஊழல் போன்றது தான் ....பரத் aeronautical நிறுவனத்திற்கு கொடுக்காமல் அணில் அம்பானியின் வெறும் 5 லட்சம் ருபாய் முதலீட்டில் துவங்கிய நிறுவனத்துக்கு கொடுத்ததை போன்று இதுவும் நேரும் ... மற்றொரு மிக பெரிய ஊழல் ...
Rate this:
Cancel
Ram - ottawa,கனடா
28-ஆக-202108:47:26 IST Report Abuse
Ram ஸ்டாலின் , சீமான் மற்றும் பொய்க்கோ : தனியாரை அனுமதிக்கமாட்டோம் , நாங்களே எதாவது செய்து தெர்மா கோலுல செய்து காசை கொள்ளையடிப்போம்
Rate this:
Cancel
சிங்கராஜன் அண்ணாமலை, கமல்பவன், சென்னை இது ஒன்றும் விஷப்பரிட்சை அல்ல. கள்ளத்துப்பாக்கிகள் செய்வது போல் கள்ள ராக்கெட்டுகள் செய்ய இயலாது. இத்துறையில் தனியார் பங்களிப்பு அவசியம். அரசின் முடிவுகள் பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்யப்பட்ட சரியான முடிவாகவே இருக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X