பொது செய்தி

தமிழ்நாடு

195 நாடுகளின் தேசிய கீதம்

Added : ஆக 28, 2021
Share
Advertisement
தனது அபார நினைவுத்திறனால் உலகிலுள்ள, 195 நாடுகளின் தேசிய கீதங்களை கேட்டு, நாடுகளின் பெயர்களை சரியாக சொல்லும் அதிசய குழந்தை ஆராத்யா, 'வேர்ல்டு புக் ஆப் ரெக்கார்ட்ஸ்'ல் இடம் பிடித்துள்ளார்.கோவை, கணபதி பகுதியில் வசிக்கும் சதீஷ்குமார் - இந்துமதி தம்பதியின் மகள் ஆராத்யா, 5. தனது அசாத்திய நினைவுத்திறனால், பல சாதனைகள் படைத்து வருகிறார்.உலக நாடுகளின் பெயர்களில் துவங்கி, கொடி,
 195 நாடுகளின் தேசிய கீதம்

தனது அபார நினைவுத்திறனால் உலகிலுள்ள, 195 நாடுகளின் தேசிய கீதங்களை கேட்டு, நாடுகளின் பெயர்களை சரியாக சொல்லும் அதிசய குழந்தை ஆராத்யா, 'வேர்ல்டு புக் ஆப் ரெக்கார்ட்ஸ்'ல் இடம் பிடித்துள்ளார்.கோவை, கணபதி பகுதியில் வசிக்கும் சதீஷ்குமார் - இந்துமதி தம்பதியின் மகள் ஆராத்யா, 5. தனது அசாத்திய நினைவுத்திறனால், பல சாதனைகள் படைத்து வருகிறார்.உலக நாடுகளின் பெயர்களில் துவங்கி, கொடி, இந்திய மாநிலங்கள், வண்ணங்கள், வடிவங்கள், உலக அதிசயங்கள் என பல தகவல்களை, தனது மூளையின் சேகரித்து வைத்துள்ளார் இச்சிறுமி. தனது இரண்டு வயதிலேயே உள்வாங்கும் மற்றும் நினைவுத்திறனால், 'இந்தியன் புக் ஆப் ரெக்கார்டில்' இடம் பிடித்துள்ளார்.அதிலிருந்து ஒரு படி மேலே போய், தற்போது உலக நாடுகளின் தேசிய கீதத்தை கேட்டு, அது எந்த நாட்டின் தேசியகீதம் என, கண்டறியும் திறனை வளர்த்து கொண்டுள்ளார்.எந்த நாட்டின் தேசிய கீதத்தை ஒலிக்க செய்தாலும், அந்த நாட்டின் பெயரை பிசிறு தட்டாமல் மழலை மொழியில் கூறுகிறார்.இது மட்டுமின்றி, இந்திய வரலாறு, இந்திய போர்கள், சுதந்திர கோஷங்கள், எல்லைகள், மண்டலங்கள், என இந்தியா பற்றிய 85 தலைப்புகளில், 1152 கேள்விகளுக்கு பதில் கூறி, கேட்போரை 'அட' போட வைக்கிறார்.சிறுமியின் திறமையை அங்கீகரித்து, லண்டனை சேர்ந்த 'வேர்ல்டு புக்ஸ் ஆப் ரெக்கார்டு' நிறுவனம், கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி, சான்றிதழ் வழங்கியுள்ளது.சிறுமியின் தாய் இந்துமதி கூறுகையில், "தேசிய கீதங்களை போனில் ஒலிக்க செய்து, பெயர்களை சொல்லிக் கொடுத்த போது, ஆர்வமாக உள்வாங்கிக்கொண்டாள். பின்னர் எந்த நாட்டின் தேசிய கீதத்தை ஒலிக்க செய்தாலும், அதன் பெயரை அற்புதமாக கண்டறிந்து கூறினாள்.ஒரு சில நாடுகளுக்கு தனியாக தேசிய கீதம் கிடையாது. வேறு நாட்டின் தேசிய கீதத்தையே, சில நாடுகள் பயன்படுத்துகின்றன. அதைக்கூட சரியாக கண்டுபிடித்து விடுவாள்.இவ்வளவு திறமையை வீணடிக்க கூடாது என்று, வீடியோ பதிவு செய்து அனுப்பி இருந்தோம். அதனை பரிசீலனை செய்து, 'வேர்ல்டு புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' அங்கீகரித்துள்ளது, மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஆராத்யாவை எங்களுக்கு கடவுள் அளித்த வரமாகவே நினைக்கிறோம்," என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X