பொது செய்தி

தமிழ்நாடு

சிறப்பு முகாமில் 108 பேருக்கு விற்பனை பத்திரம் வினியோகம்

Added : ஆக 28, 2021
Share
Advertisement
கோவை:விற்பனை பத்திரம் பெறுவதற்கான மூன்று நாள் சிறப்பு முகாமில், 108 ஒதுக்கீட்டுதாரர்கள் விற்பனைப் பத்திரம் பெற்று பயனடைந்துள்ளனர்.தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் கோவை பிரிவுக்கு உட்பட்ட கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களில் ஒதுக்கீடு பெற்று, விற்பனை பத்திரம் பெறாமல் உள்ள மனைகள், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளின்

கோவை:விற்பனை பத்திரம் பெறுவதற்கான மூன்று நாள் சிறப்பு முகாமில், 108 ஒதுக்கீட்டுதாரர்கள் விற்பனைப் பத்திரம் பெற்று பயனடைந்துள்ளனர்.தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் கோவை பிரிவுக்கு உட்பட்ட கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களில் ஒதுக்கீடு பெற்று, விற்பனை பத்திரம் பெறாமல் உள்ள மனைகள், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளின் ஒதுக்கீடுதாரர்களுக்கு கடந்த, 24 முதல், 26ம் தேதி வரை, விற்பனை பத்திரம் வழங்கும் சிறப்பு முகாம் நடந்தது.கோவை வீட்டு வசதி வாரியப்பிரிவு, டாடாபாத் அலுவலகத்தில், சேலம் சரக மேற்பார்வை பொறியாளர் சாந்தி, கோவை வீட்டுவசதி வாரிய செயற்பொறியாளர் கரிகாலன், விற்பனை மற்றும் சேவை மேலாளர் அருண் முன்னிலையில், 277 ஒதுக்கீட்டுதாரர்கள் பங்கேற்றனர். இதில், ஏற்கனவே முழுத்தொகை செலுத்தியவர்கள், நிலுவைத்தொகை செலுத்தாதவர்கள் 108 பேர், முகாமில் முழுத்தொகை செலுத்தி, விற்பனைப் பத்திரம் பெற்று பயனடைந்துள்ளதாக, வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X