பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயிகளிடம் காணொலி கருத்து கேட்பு கூட்டம்

Added : ஆக 28, 2021
Share
Advertisement
மதுரை : மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமாரி, வேளாண் இணை இயக்குனர் விவேகானந்தன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) தனலட்சுமி, பொதுப்பணித்துறை நீர்வள ஆதார செயற் பொறியாளர் சுகுமாரன், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குனர் ஜீவா, ஊராட்சிகளுக்கான உதவி இயக்குனர் செல்லத்துரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.விவசாயிகள் பழனிசாமி, திருப்பதி, மாரிச்சாமி உள்ளிட்டோர் காணொலி

மதுரை : மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமாரி, வேளாண் இணை இயக்குனர் விவேகானந்தன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) தனலட்சுமி, பொதுப்பணித்துறை நீர்வள ஆதார செயற் பொறியாளர் சுகுமாரன், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குனர் ஜீவா, ஊராட்சிகளுக்கான உதவி இயக்குனர் செல்லத்துரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.விவசாயிகள் பழனிசாமி, திருப்பதி, மாரிச்சாமி உள்ளிட்டோர் காணொலி காட்சி வாயிலாக கூட்டம் நடத்துவதால் கோரிக்கைகளை முழுமையாக தெரிவிக்க முடியவில்லை என குற்றம் சாட்டினர். கொரோனா தொற்றை தடுக்கவே காணொலி காட்சி வாயிலாக கூட்டம் நடத்துவதாகவும், வரும் காலங்களில் நேரடியாக கூட்டம் நடத்துவது குறித்து முடிவு செய்வதாகவும் கலெக்டர் தெரிவித்தார்.நெல் கொள்முதல் குறித்த விவசாயிகளின் குறைகளுக்கு பதிலளித்த கலெக்டர், ''முறைகேடுகள், வியாபாரிகளின் தலையீடுகளை தவிர்க்க மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் நெல் கொள்முதல் செய்யப்படும். இதுகுறித்து விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படும். அதில் தெரிவிக்கும் கருத்துக்களின்படி கொள்முதல் நடக்கும். எனவே முறைகேடுகளுக்கு வாய்ப்பு இருக்காது,'' என்றார்.பின் நடந்த விவாதம்...ரவி : சிங்கம்புணரி நீட்டிப்பு கால்வாய்க்கு தண்ணீர் திறக்காமல் தேனி 18 ம் கால்வாய்க்கு தண்ணீர் திறந்து தமிழக அரசு மேலுாரை வஞ்சிக்கிறது. தானியங்கி அளவீட்டு கருவியை பொருத்த பத்தாண்டுகளாக வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை.பொதுப்பணித்துறை அதிகாரி: நீடிப்பு கால்வாய்க்கு தண்ணீர் திறக்கப்படும்.ராஜமாணிக்கம்: 50 - 60 நாள் நெல் பயிர் அன்னம் (பால்) பிடிக்கும் பருவம் என்பதால் பொதுப்பணித்துறையினர் தொடர்ந்து தண்ணீர் வழங்க வேண்டும். பாசன கால்வாய்கள் துார்வாரப்படவில்லை.பழனிச்சாமி, கதிரேசன்: அலங்காநல்லுார் தேசிய சர்க்கரை ஆலையில் இந்தாண்டு அரவை துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.கலெக்டர்: அரவை துவங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.ராமச்சந்திரன்: என் நிலம் தொடர்பாக கணினி திருத்தம் செய்ய கோரி மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை.கலெக்டர்: இன்றே திருத்தம் செய்து வழங்கப்படும்.திருப்பதி: கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளுக்கு கடன் வழங்க மறுக்கின்றனர்.மத்திய கூட்டுறவு வங்கி அதிகாரி: கடந்தாண்டு விவசாயிகளுக்கு ரூ.30 கோடி பயிர் கடன் வழங்கப்பட்டது. இந்தாண்டு ரூ.45 கோடி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. கடன் வழங்காத கூட்டுறவு சங்கங்கள் குறித்து தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.மாரிசாமி: அச்சம்பத்து மற்றும் சுற்றியுள்ள குடியிருப்புகளிலிருந்து கழிவுநீர் மாடக்குளம் கண்மாய் வரத்து கால்வாயில் விடப்படுகிறது. தடுத்து நிறுத்த வேண்டும்.கலெக்டர்: அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.சீத்தாராமன்: கூட்டுறவு சங்கங்கள் மூலம் நெல் கொள்முதல் செய்வதில் பல இடையூறுகள் ஏற்படும். எனவே தற்போது உள்ளபடி நுகர்பொருள் வாணிப கழகம் மூலம்கொள்முதல் செய்ய வேண்டும்.கலெக்டர்: தற்போதைய நடைமுறையில் முறைகேடு இருப்பதாக விவசாயிகள் தெரிவித்ததால் கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படவுள்ளது. இதுகுறித்து விவசாயிகளிடம் கருத்து கேட்டு முடிவு செய்யப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.மதுரை, ஆக. 28 -முறைகேடுகள், வியாபாரிகள் தலையீடுகளை தவிர்க்க கூட்டுறவு சங்கங்கள் மூலம் நெல் கொள்முதல் செய்யப்படும். இதுகுறித்து விவசாயிகளிடம் கருத்து கேட்கப்படும் என மதுரையில் நேற்று காணொலி காட்சி வாயிலாக நடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் அனீஷ்சேகர் அறிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X