பொது செய்தி

தமிழ்நாடு

ரயிலில் பெண்களுக்கு தொந்தரவா

Added : ஆக 28, 2021
Share
Advertisement
கோவை:'ரயில் மேடட்' உதவி அழைப்பு எண்ணான, 139 வாயிலாக பெண் பயணிகள் உடனடி புகார்களுக்கு, தீர்வு காண அறிவுறுத்தப்பட்டுள்ளது.ரயில்வே நிர்வாகமானது, வருவாயை மட்டுமே இலக்காக கொள்ளாமல், பயணிகள் பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. அந்த வகையில், 'ரயில் மேடட்' எனும் செயலி, இரு ஆண்டுகளுக்கு முன்பு, அறிமுகம் செய்யப்பட்டது.இச்செயலி வாயிலாக, ஸ்டேஷன் மற்றும்

கோவை:'ரயில் மேடட்' உதவி அழைப்பு எண்ணான, 139 வாயிலாக பெண் பயணிகள் உடனடி புகார்களுக்கு, தீர்வு காண அறிவுறுத்தப்பட்டுள்ளது.ரயில்வே நிர்வாகமானது, வருவாயை மட்டுமே இலக்காக கொள்ளாமல், பயணிகள் பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. அந்த வகையில், 'ரயில் மேடட்' எனும் செயலி, இரு ஆண்டுகளுக்கு முன்பு, அறிமுகம் செய்யப்பட்டது.இச்செயலி வாயிலாக, ஸ்டேஷன் மற்றும் ரயில்களில் இருந்தபடி குறைகளை புகார்களாக தெரிவிக்கலாம்.ரயில்வே பாதுகாப்பு படை உள்ளிட்ட, பல்வேறு பிரிவுகளின் உதவி அழைப்பு எண், இச்செயலியில் இடம் பெற்றிருக்கும்.தற்போது, பயணிகள் தங்கள் பிரச்னைகளுக்கு, உடனுக்குடன் தீர்வு காணும் விதமாக,'ரயில் மேடட்' உதவி அழைப்பு எண்ணான, 139 சேவைஇடம் பெற்றுள்ளது. இந்த அழைப்பு எண் சேவையானது, தமிழ், மலையாளம் என, 12 மொழிகளில், 24 மணி நேரமும் வழங்கப்படுகிறது.ரயில் பயணிகள், குறிப்பாக பெண் பயணிகள், ரயில் பயணத்தின்போது ரயில் மேடட் 'போர்ட்டல்' அல்லது ஒருங்கிணைந்த, 139 உதவி அழைப்பு எண்ணில் தொடர்பு கொள்ள, ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.பெண் பயணிகள் டி.டி.இ.,கள், ஆர்.பி.எப்., ரயில்வே போலீசார் ஆகியோரையும், தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருவதாக, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X