பொது செய்தி

தமிழ்நாடு

மாநகராட்சி மறு ஏலம் முடிந்தது தடை கோரிய வழக்கு தள்ளுபடி

Added : ஆக 28, 2021
Share
Advertisement
மதுரை : ஆளும் கட்சி தலையீடு, சட்டம் ஒழுங்கு பிரச்னையால் ஜூலை 27ல் நிறுத்தப்பட்ட மதுரை மாநகராட்சி பொது ஏலம் போலீஸ் பாதுகாப்புடன் மறு ஏலமாக நடந்தது. ஏல அறிவிப்பில் குளறுபடி உள்ளதால் தடைகோரி உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தொடரப்பட்ட இரு பொது நல வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன.2021 - 22 மற்றும் 2023 - 24ம் ஆண்டுகளுக்குரிய மாநகராட்சி பொது ஏலத்தில் வாரச்சந்தைகள், வாகன காப்பகங்கள்

மதுரை : ஆளும் கட்சி தலையீடு, சட்டம் ஒழுங்கு பிரச்னையால் ஜூலை 27ல் நிறுத்தப்பட்ட மதுரை மாநகராட்சி பொது ஏலம் போலீஸ் பாதுகாப்புடன் மறு ஏலமாக நடந்தது. ஏல அறிவிப்பில் குளறுபடி உள்ளதால் தடைகோரி உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தொடரப்பட்ட இரு பொது நல வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன.

2021 - 22 மற்றும் 2023 - 24ம் ஆண்டுகளுக்குரிய மாநகராட்சி பொது ஏலத்தில் வாரச்சந்தைகள், வாகன காப்பகங்கள் உள்ளிட்ட 65 இனங்களுக்கு ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டது. இதில் 38 இனங்களுக்கு 89 நபர்கள் பங்கேற்றனர். மீதமுள்ள 27 இனங்களுக்கு யாரும் விண்ணப்பிக்கவில்லை. கடந்த ஜூலை 27ல் விண்ணப்பித்திருந்த 163 நபர்களில் நேற்று 89 நபர்கள் மட்டுமே பங்கேற்றனர்.ஆறு இனங்களுக்கு தலா ஒன்று, 17க்கு தலா 2, 11க்கு தலா 3, 4க்கு தலா 4 நபர்கள் பங்கேற்றனர்.

இந்த ஒப்பந்தம் மூலம் வாகன காப்பக கட்டணம் ரூ.10 உயர்த்துவதற்கு பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் ரூ.7 ஆக குறைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். சட்டம் ஒழுங்கு பிரச்னை தவிர்க்க மாநகராட்சி வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டதால் எந்த சலசலப்பும் இல்லாமல் அமைதியாக ஏலம் நடந்தது முடிந்தது.ஏல அறிவிப்பில் பல குளறுபடிகள் உள்ளதாக கூறி தடை செய்ய கோரி இரு பொது நல வழக்குகளை உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதிகள் எம்.துரைசுவாமி, கே.முரளிசங்கர் தள்ளுபடி செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X