அரசியல் செய்தி

தமிழ்நாடு

'அம்மா ஸ்கூட்டர்' மானியத்தொகை விடுவிக்க தெற்கு எம்.எல்.ஏ., கோரிக்கை

Added : ஆக 28, 2021
Share
Advertisement
கோவை:''கடந்த அ.தி.மு.க., அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட, அம்மா ஸ்கூட்டர் திட்டத்தை ரத்து செய்வதாக, அரசு அறிவித்த நிலையில், அத்திட்டத்தின் கீழ் ஸ்கூட்டர்களை வாங்கிய பெண்களுக்கு, அதற்கான நிதியைஅரசு விடுவிக்க வேண்டும்,'' என்று பா.ஜ.,எம்.எல்.ஏ.,வானதிசீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:உழைக்கும் பெண்களின் வசதிக்காக, முந்தைய அ.தி.மு.க., அரசால்

கோவை:''கடந்த அ.தி.மு.க., அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட, அம்மா ஸ்கூட்டர் திட்டத்தை ரத்து செய்வதாக, அரசு அறிவித்த நிலையில், அத்திட்டத்தின் கீழ் ஸ்கூட்டர்களை வாங்கிய பெண்களுக்கு, அதற்கான நிதியைஅரசு விடுவிக்க வேண்டும்,'' என்று பா.ஜ.,எம்.எல்.ஏ.,வானதிசீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:உழைக்கும் பெண்களின் வசதிக்காக, முந்தைய அ.தி.மு.க., அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது, அம்மா இருசக்கர வாகன திட்டம். இத்திட்டத்தின் கீழ், பல ஆயிரக்கணக்கான பெண்கள் பயனடைந்துள்ளனர். புதியதாக பொறுப்பேற்ற தி.மு.க., அரசு, இத்திட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.இது வேலைக்கு செல்லும் பெண்கள் மத்தியில், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்திட்டத்தை தொடர, அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.திட்டத்தின் கீழ் அரசு உத்தரவு பெற்று, இரு சக்கர வாகனங்களைகடந்த ஆட்சி நிறைவடையும் தருவாயில் வாங்கியவர்கள், அரசின் மானிய தொகையை பெறாமல் காத்துக்கிடக்கின்றனர். அதற்கான நிதி முந்தைய அரசால் அப்போதே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் விடுவிக்கப்படாமல் உள்ளது.அதனால் விதிமுறைகளின் கீழ், வாகனங்களை வாங்கிய பெண்களுக்கு, அரசு மானியத் தொகையை விடுவிக்க வேண்டும்.இவ்வாறு, வானதிசீனிவாசன் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X