பொது செய்தி

தமிழ்நாடு

பேராசிரியருக்கு முத்தமிழ் விருது

Added : ஆக 28, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை காமராஜ் பல்கலை தமிழ்த்துறைப் பேராசிரியர் சத்தியமூர்த்திக்கு சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா கலை இலக்கிய பேரவை சார்பில் 'பன்னாட்டு முத்தமிழ் விருது - 2021' வழங்கப்பட்டது.தமிழர்களின் தெருக்கூத்து நாடகக் கலையை பல்வேறு இடங்களில் தொடர்ந்து 365 நாட்கள் நடத்தி ஆவணப்படுத்தினார். இயல், இசை, நாடகம் மற்றும் தமிழர்களின் தொன்மை சிறப்புக்கள், பண்பாடு மற்றும்

மதுரை : மதுரை காமராஜ் பல்கலை தமிழ்த்துறைப் பேராசிரியர் சத்தியமூர்த்திக்கு சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா கலை இலக்கிய பேரவை சார்பில் 'பன்னாட்டு முத்தமிழ் விருது - 2021' வழங்கப்பட்டது.

தமிழர்களின் தெருக்கூத்து நாடகக் கலையை பல்வேறு இடங்களில் தொடர்ந்து 365 நாட்கள் நடத்தி ஆவணப்படுத்தினார். இயல், இசை, நாடகம் மற்றும் தமிழர்களின் தொன்மை சிறப்புக்கள், பண்பாடு மற்றும் மரபுகளை பாதுகாக்கும் வகையில் பல்வேறு செயல்பாடுகளில் சத்தியமூர்த்தி ஈடுபட்டு வருகிறார்.இவரது பணியை பாராட்டி கலை இலக்கிய பேரவை நடத்திய சர்வதேச கலைஞர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கான பாராட்டு விழாவில் இவருக்கு விருது வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X