பொது செய்தி

தமிழ்நாடு

கொங்கு நாட்டு வரலாறும் கோவை புராணமும்: 30 ஆவணப்படங்களில் மிளிர்கிறது

Added : ஆக 28, 2021
Share
Advertisement
கோவையின் தொன்மையான வரலாற்று சிறப்பை, 30 ஆவணப்படங்களாக எடுத்து, வெளியிட்டு இருக்கிறார், கோவையை சேர்ந்த ஆவணப்பட இயக்குனர் மயன்.கொங்குநாடு என்பது தமிழ்நாட்டின் மேற்கு மண்டலமாகும். சேர மன்னர்களால் ஆளப்பட்ட இப்பகுதி, கிழக்கில் தொண்டை நாடும், தென் கிழக்கில் சோழ நாடும் தெற்கே பாண்டிய நாடும் சூழப்பட்டது.இன்றைய கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம், தருமபுரி, திண்டுக்கல்
 கொங்கு நாட்டு வரலாறும் கோவை புராணமும்: 30 ஆவணப்படங்களில் மிளிர்கிறது

கோவையின் தொன்மையான வரலாற்று சிறப்பை, 30 ஆவணப்படங்களாக எடுத்து, வெளியிட்டு இருக்கிறார், கோவையை சேர்ந்த ஆவணப்பட இயக்குனர் மயன்.கொங்குநாடு என்பது தமிழ்நாட்டின் மேற்கு மண்டலமாகும். சேர மன்னர்களால் ஆளப்பட்ட இப்பகுதி, கிழக்கில் தொண்டை நாடும், தென் கிழக்கில் சோழ நாடும் தெற்கே பாண்டிய நாடும் சூழப்பட்டது.இன்றைய கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம், தருமபுரி, திண்டுக்கல் ஆகியவை, கொங்கு நாட்டின் முக்கிய பகுதியாக இருந்தாலும், கோவைக்கு மட்டும் தனி சிறப்பு உண்டு.கோவையின் சிறப்பை, இன்றைய நவீன காலத்துக்கு ஏற்ப டிஜிட்டல் வடிவத்தில் ஆவணப்படங்களாக்கி இருக்கிறார் ஆவணப்பட இயக்குனர் மயன்.வெள்ளக்கிணறு பிரிவில் வசித்து வரும் இவர், கோவையின் வரலாற்று தொன்மையான இடங்கள், மலைகள், ஊர்கள், கோவில்கள் மற்றும் இலக்கிய ஆளுமைகள் குறித்து, 30 ஆவணப்படங்களை எடுத்து, சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கிறார். 'கோவை புராணம்' என்ற தனது, 30வது ஆவணப்படத்தை வெளியிட இருக்கிறார்.இயக்குனர் மயனிடம் பேசினோம்...அடிப்படையில் நான் ஒரு ஆர்க்கிடெக்ட் இன்ஜினியர். ஒளிப்பதிவில் ஆர்வம் ஏற்பட்டு, கேமரா தொழில்நுட்பங்களை கற்றுக்கொண்டேன். இப்போது இருக்கும் நவீன கோவையை விட, பழைய கோவை மிகவும் அழகாக தெரிந்தது. கோவையின் வரலாற்று தொன்மைகளை டிஜிட்டல் ஆவணமாக பதிவு செய்து, மக்களுக்கு காட்டவேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது.அதனால், கோவை, நீலகிரிக்கு உட்பட்ட கோவில்கள், மலைகள், பாறை ஓவியங்கள், பழமையான திரை அரங்குகள் மற்றும் புவியரசு, கோவை ஞானி, சி.ஆர்.ரவீந்திரன் உள்ளிட்ட முக்கிய எழுத்தாளர்கள் எட்டு பேர் குறித்த ஆவணப்படங்கள் என, 28 படங்களை எடுத்து இருக்கிறேன்.இப்போது 'கோவை புராணம்' என்ற முழு நீள படத்தையும், ஓவியர் ஆதிமூலம் குறித்து ஒரு ஆவணப்படத்தையும், எடுத்து இருக்கிறேன்.இவ்வாறு, கூறினார் மயன்.இந்த இரண்டு படங்களும், நாளை (ஞாயிறு) வெளியிடப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X