சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பிரபல நிறுவனத்தின் பெயரில் போலி உதிரிபாகம் தயாரிப்பு: காப்புரிமை சட்டத்தின் கீழ் இருவர் கைது

Added : ஆக 28, 2021
Share
Advertisement
கோவை:பிரபல நிறுவனத்தின் பெயரில், போலி உதிரிபாகங்கள் தயாரித்த இருவரை, போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை சேர்ந்தவர் இளஞ்செழியன். இவர் டில்லியில் உள்ள தனியார் நிறுவனத்தில் உதவி மேலாளராக, பணிபுரிந்து வருகிறார். கோவை நஞ்சப்பா ரோட்டில் உள்ள பல்வேறு கடைகளில், ஆய்வு மேற்கொண்ட போது, பெங்களூருவை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் பெயரில், போலி

கோவை:பிரபல நிறுவனத்தின் பெயரில், போலி உதிரிபாகங்கள் தயாரித்த இருவரை, போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை சேர்ந்தவர் இளஞ்செழியன். இவர் டில்லியில் உள்ள தனியார் நிறுவனத்தில் உதவி மேலாளராக, பணிபுரிந்து வருகிறார். கோவை நஞ்சப்பா ரோட்டில் உள்ள பல்வேறு கடைகளில், ஆய்வு மேற்கொண்ட போது, பெங்களூருவை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் பெயரில், போலி உதிரிபாகங்கள் தயாரித்து, விற்பனை செய்வதை கண்டறிந்தார்.கோவை ரேஸ்கோர்ஸ், காட்டூர் போலீஸ் ஸ்டேஷன்களில் புகார் அளித்தார்.ரேஸ்கோர்ஸ் மற்றும் காட்டூர் போலீசார் இணைந்து, கோவை காந்திபுரம் மற்றும் அவிநாசி ரோட்டில் உள்ள கடைகளில் ஆய்வு நடத்தினர்.இதில் பிரபல நிறுவனத்தின் பெயரில், போலியாக உதிரிபாகங்கள் தயாரித்தது நிரூபணமானது. இது தொடர்பாக, ரமேஷ், குணால் ஆகியோரை, போலீசார் கைது செய்தனர்.அவர்கள் மீது, காப்புரிமை சட்டத்தின் கீழ், வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்களிடம் இருந்து, பல லட்சம் ரூபாய் மதிப்பிலான உதிரிபாகங்களை, போலீசார் பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X