பொது செய்தி

தமிழ்நாடு

'தடுப்பூசிக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை'

Added : ஆக 28, 2021
Share
Advertisement
கோவை:கோவை மாவட்டத்தில் சி.எஸ்.ஆர்., நிதியின் கீழ், இலவச தடுப்பூசி செலுத்தும் திட்டத்தில், பொதுமக்களிடம் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படுவதில்லை என, சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதியின் (சி.எஸ்.ஆர்.,) கீழ், பொதுமக்களுக்கு இலவச தடுப்பூசி செலுத்தும் திட்டம், கடந்த மாதம் துவங்கப்பட்டது.கோவைக்கு

கோவை:கோவை மாவட்டத்தில் சி.எஸ்.ஆர்., நிதியின் கீழ், இலவச தடுப்பூசி செலுத்தும் திட்டத்தில், பொதுமக்களிடம் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படுவதில்லை என, சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதியின் (சி.எஸ்.ஆர்.,) கீழ், பொதுமக்களுக்கு இலவச தடுப்பூசி செலுத்தும் திட்டம், கடந்த மாதம் துவங்கப்பட்டது.கோவைக்கு சி.எஸ்.ஆர்.,நிதியாக தனியார் மருத்துவமனைகள் நிறுவனங்களிடம் இருந்து, ஒரு கோடியே 18 லட்சத்து 94 ஆயிரம் ரூபாய் பெறப்பட்டுள்ளது. அதன் மூலம், 13 ஆயிரத்து 698 டோஸ் பெறப்பட்டுள்ளது.இதில், 7 ஆயிரத்து 305 டோஸ் இதுவரை பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சி.எஸ்.ஆர்.,நிதியின் கீழ், இலவச தடுப்பூசி செலுத்தும் திட்டத்தில், பொதுமக்களிடம் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படுவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, கொரோனா நோடல் அதிகாரி ராஜேஷ் கூறியதாவது:சி.எஸ்.ஆர்.,நிதியில் தடுப்பூசி செலுத்துவதற்கு விதிமுறைகள் உள்ளன. இந்த நிதியின் மூலம், இலவச தடுப்பூசி செலுத்தும் மருத்துவமனைகளோ, தனியார் நிறுவனங்களோ, மலைவாழ் கிராமங்கள், குடிசை பகுதிகள், புறநகர் பகுதிகள் என எந்த இடத்தை வேண்டுமானாலும் தேர்வு செய்து, அங்கு இலவச தடுப்பூசி முகாம் நடத்திக் கொள்ளலாம்.அவ்வாறு, தடுப்பூசி செலுத்தவுள்ள இடங்கள் குறித்தும், பயனாளிகளின் விபரங்களையும் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும். முகாம் முறையாக நடக்கிறதா என சுகாதார துறையினர், ஆய்வு செய்வர்.இதன் அடிப்படையில்தான், சி.எஸ்.ஆர்.,நிதி மூலம் இலவச தடுப்பூசி முகாம் செயல்பட்டு வருகிறது. இதற்காக, பொதுமக்களிடம் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படுவதில்லை. கிட்டாம்பாளையம், கொண்டையம்பாளையம், வேடப்பட்டி, கரடிவாவி, நேருநகர், வாகராயம்பாளையம், உப்பிலிபாளையம், கிராமப்பகுதிகளில் அமைந்துள்ள, முதியோர் இல்லங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இதுவரை, சி.எஸ்.ஆர்.,நிதியின் கீழ் இலவச தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டுள்ளது.வெள்ளலுார், பொகலுார், சாய்பாபாகோவில், ஆகிய பகுதிகளில் இன்றும் நாளையும் தடுப்பூசி முகாம் நடத்தப்படவுள்ளது.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X