பொது செய்தி

தமிழ்நாடு

குப்பை அள்ளாமல் (ஏ)மாற்று வேலை! ஊழியர்களுக்குள் புகைச்சல்

Added : ஆக 28, 2021
Share
Advertisement
கோவை;வார்டு பணிக்கு அனுப்பப்பட்ட, 325 ஊழியர்களுக்கு, குப்பை அள்ளும் பணி ஒதுக்காமல், மாற்று வேலை வழங்குவதால், ஊழியர்கள் மத்தியில் புகைச்சல் ஏற்பட்டுள்ளது.கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், கோவை மாநகராட்சியில் காலியாக இருந்த, 549 துாய்மை பணியாளர் பணியிடங்களுக்கு, நேரடி நியமன முறையில் ஆட்கள் நியமிக்கப்பட்டனர்.அனைத்து ஜாதியினரும் பங்கேற்கலாம்; கல்வித்தகுதி இல்லை என கூறியதால்,

கோவை;வார்டு பணிக்கு அனுப்பப்பட்ட, 325 ஊழியர்களுக்கு, குப்பை அள்ளும் பணி ஒதுக்காமல், மாற்று வேலை வழங்குவதால், ஊழியர்கள் மத்தியில் புகைச்சல் ஏற்பட்டுள்ளது.கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், கோவை மாநகராட்சியில் காலியாக இருந்த, 549 துாய்மை பணியாளர் பணியிடங்களுக்கு, நேரடி நியமன முறையில் ஆட்கள் நியமிக்கப்பட்டனர்.அனைத்து ஜாதியினரும் பங்கேற்கலாம்; கல்வித்தகுதி இல்லை என கூறியதால், பட்டம் படித்தவர்களும் விண்ணப்பித்தனர். இதில், அரசியல்வாதிகளின் செல்வாக்ேகாடு வந்தவர்கள் பலர் வேலையில் சேர்க்கப்பட்டனர்.அவர்கள் துாய்மை பணிக்கு அனுப்பப்படவில்லை. மாறாக, கொரோனா கட்டுப்பாடு மையத்துக்கு நியமிக்கப்பட்டனர். வரி வசூலர்களுக்கு உதவியாளர்களாக சிலர் அனுப்பப்பட்டனர். இவ்வாறு, 325 பேர் அயல் பணியாக, வெவ்வேறு பிரிவுகளில் பணிபுரிந்தனர்.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், மாநகராட்சி கமிஷனராக ராஜகோபால், துணை கமிஷனராக விமல்ராஜ் நியமிக்கப்பட்டனர். இவ்விரு அதிகாரிகளும் ஆலோசித்து, நிர்வாக சீரமைப்பு வேலைகளில் ஈடுபட்டனர்.பணி நியமனத்துக்கு மாறாக, வேலை செய்வோரை கண்டறிந்து, அவர்கள் சார்ந்த துறைக்கே திருப்பி அனுப்பினர். அதன்படி, 325 பேரும் வார்டு பணிகளுக்கு அனுப்பப்பட்டனர்.ஆனால், அவர்களில் பலர் குப்பை அள்ளும் வேலைக்குச் செல்லாமல், டெங்கு கொசு ஒழிப்பு பணி மேற்கொள்கின்றனர்.பிரதான அலுவலகத்தில், தகவல் தொழில்நுட்ப பிரிவில் ஒருவர், 16 மற்றும், 17வது வார்டு அலுவலகம் மற்றும் வடவள்ளி சுகாதார அலுவலகத்தில் ஒருவர் என, ஒவ்வொரு இடங்களில் மாற்றுப்பணி செய்கின்றனர். 22வது வார்டை சேர்ந்த ஒருவர், அண்ணா மார்க்கெட்டில் கட்டணம் வசூலிக்கும் பணி செய்கின்றனர்.கருணை அடிப்படையில் வேலைக்கு சேர்ந்தவர்களில், துணை கமிஷனர் அலுவலகத்தில் ஒருவர் அலுவலக உதவியாளராகவும், ஒருவர் டிரைவராகவும், கமிஷனர் அலுவலகத்தில் ஒருவர் டிரைவராகவும் பணிபுரிகின்றனர்.மாநகராட்சி ஊழியர்கள் கூறுகையில், 'பணி நியமன உத்தரவுப்படி, வேலை செய்ய வேண்டும் என கூறி, 325 பேரை, வார்டுக்கு அனுப்பினர். ஆனால், கமிஷனர் மற்றும் துணை கமிஷனருக்கு தெரியாமல், அவர்களுக்கு வெவ்வேறு வேலைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அ.தி.மு.க.,வினர் செல்வாக்குடன், இன்னமும் பலர் சுற்றிக் கொண்டிருக்கின்றனர். நடவடிக்கை எடுக்க வேண்டிய உயரதிகாரிகள், மவுனம் சாதிக்கின்றனர்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X