சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தட்டிக்கேட்ட பெண்ணுக்கு மிரட்டல் விடுத்தவர் கைது

Added : ஆக 28, 2021
Share
Advertisement
வடவள்ளி:வடவள்ளியில், பெண்ணுக்கு மிரட்டல் விடுத்தவரை, போலீசார் கைது செய்தனர்.வடவள்ளி, மகாராணி அவென்யூவை சேர்ந்தவர் பிங்கி, 40. இவரின் வீட்டின் அருகே உள்ள பொது வழித்தடத்தை மறைத்து, சுந்தரம் என்பவர் கட்டட வேலை செய்ய முயற்சித்துள்ளார். இதனால், சுந்தரம், பிங்கி மற்றும் அவரது கணவரிடம், அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.இது குறித்து, பிங்கியின் கணவர் சான்டி வில்லியம்

வடவள்ளி:வடவள்ளியில், பெண்ணுக்கு மிரட்டல் விடுத்தவரை, போலீசார் கைது செய்தனர்.வடவள்ளி, மகாராணி அவென்யூவை சேர்ந்தவர் பிங்கி, 40. இவரின் வீட்டின் அருகே உள்ள பொது வழித்தடத்தை மறைத்து, சுந்தரம் என்பவர் கட்டட வேலை செய்ய முயற்சித்துள்ளார். இதனால், சுந்தரம், பிங்கி மற்றும் அவரது கணவரிடம், அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.இது குறித்து, பிங்கியின் கணவர் சான்டி வில்லியம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இவ்வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், சுந்தரம் மற்றும் 4 பேர், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக கூறப்படும் பொது வழித்தடத்தில் நுழைந்து, பிங்கியை தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.இதுகுறித்து, பிங்கி வடவள்ளி போலீசில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார், சுந்தரத்தை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X