பொது செய்தி

தமிழ்நாடு

சங்கனூர் கிளை வாய்க்கால் மறுஅளவீடு: துல்லியமாக அளந்து எல்லை கல் நடவு

Added : ஆக 28, 2021
Share
Advertisement
கோவை;கள்ளிமடையில், ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள சங்கனுார் கிளை வாய்க்கால், நேற்று மறுஅளவீடு செய்யப்பட்டது.கோவை, உப்பிலிபாளையம் அருகே தனலட்சுமிபுரம், கள்ளிமடை வழியாக, சிங்காநல்லுார் குளத்தில் இணையும் வகையில், சங்கனுார் கிளை வாய்க்கால் செல்கிறது. ஆக்கிரமிப்பில் இருந்த இந்த வாய்க்காலை, சில ஆண்டுகளுக்கு முன், அப்பகுதி விவசாயிகள், சட்டப்போராட்டம் நடத்தி, மீட்டனர்.
 சங்கனூர் கிளை வாய்க்கால் மறுஅளவீடு: துல்லியமாக அளந்து எல்லை கல் நடவு

கோவை;கள்ளிமடையில், ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள சங்கனுார் கிளை வாய்க்கால், நேற்று மறுஅளவீடு செய்யப்பட்டது.கோவை, உப்பிலிபாளையம் அருகே தனலட்சுமிபுரம், கள்ளிமடை வழியாக, சிங்காநல்லுார் குளத்தில் இணையும் வகையில், சங்கனுார் கிளை வாய்க்கால் செல்கிறது. ஆக்கிரமிப்பில் இருந்த இந்த வாய்க்காலை, சில ஆண்டுகளுக்கு முன், அப்பகுதி விவசாயிகள், சட்டப்போராட்டம் நடத்தி, மீட்டனர். வாய்க்காலை துார்வாரி, தங்கு தடையின்றி தண்ணீர் செல்வதற்கான வழித்தடத்தை, பொதுப்பணித்துறை ஏற்படுத்தாமல் விட்டு விட்டது. நீர் வழித்தடம் மீண்டும் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளது. 17 அடி அகலத்துக்கு இருக்க வேண்டிய கிளை வாய்க்கால், 3 அடியாக சுருங்கி விட்டது.தீர்வு காண, அப்பகுதி விவசாயிகள், தொடர்ந்து அதிகாரிகளுக்கு மனு அளித்து வந்தனர். வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்றுவதில் அக்கறை காட்டாத பொதுப்பணித்துறையினர், நீர் வழித்தடங்கள் பராமரிக்கும் பொறுப்பை, மாநகராட்சி வசம் கொடுத்து விட்டதாக, தட்டிக் கழித்து வந்தனர்.மாநகர எல்லைக்குள் உள்ள ஒன்பது குளங்கள் மட்டுமே மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது. நீர் வழித்தடங்களை மீட்பது, ஆக்கிரமிப்பு அகற்றுவது, சீரமைப்பது, துார்வாருவது உள்ளிட்ட வேலைகளை, பொதுப்பணித்துறையே செய்ய வேண்டும்.தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டதாலும், சட்டசபை கூட்டம் நடந்து வருவதாலும், சம்பவம் தொடர்பாக, கோர்ட்டில் வழக்கு நடந்து வருவதாலும், அனைத்து துறை அலுவலர்கள் முன்னிலையில், மீண்டும் மறுஅளவீடு செய்ய உத்தரவிடப்பட்டது.அதன்படி, தெற்கு தாசில்தார் புனிதா தலைமையில் வருவாய்த்துறையினர், நில அளவை பிரிவினர், பொதுப்பணித்துறையினர், மாநகராட்சி அலுவலர்கள் முன்னிலையில் போலீஸ் பாதுகாப்புடன், நகரளவை புத்தகத்தின் அடிப்படையில், துல்லியமாக அளவீடு செய்யப்பட்டது.அப்போது, நீர் வழித்தடமாக இருபுறமும் கரை அமைத்து, வாய்க்கால் ஏற்படுத்தப்படும்; வழித்தடமாக பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது. அளவீடு செய்து, எல்லைக்கற்கள் நடப்பட்டுள்ளன.இனி, பொதுப்பணித்துறையினர், வாய்க்காலை மீட்டால், மழைக்காலத்தில் தண்ணீர் செல்ல வாய்ப்பு உருவாகும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X