பொது செய்தி

தமிழ்நாடு

'நேரா எங்களை வந்து பாருங்க: புரோக்கர்களை பார்க்காதீங்க!'

Added : ஆக 28, 2021
Share
Advertisement
கோவை:''இடைத்தரகர்களை தவிர்த்து நேரடியாக அதிகாரிகளை சந்தித்து, பணிகளை மேற்கொள்ளலாம்,'' என்று, மாவட்ட நகர் ஊரமைப்புத்துறை இணை இயக்குனர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.கோவை டாடாபாத் பகுதியில் செயல்பட்டு வந்த, உள்ளூர் திட்டக்குழுமம் மற்றும் கோவை நஞ்சப்பா சாலையில் இயங்கி வந்த, மண்டல ஊரக நகரமைப்புத்துறை ஆகிய இரு வேறு பிரிவு அலுவலகங்களும், 'நகர் ஊரமைப்புத்துறையாக'

கோவை:''இடைத்தரகர்களை தவிர்த்து நேரடியாக அதிகாரிகளை சந்தித்து, பணிகளை மேற்கொள்ளலாம்,'' என்று, மாவட்ட நகர் ஊரமைப்புத்துறை இணை இயக்குனர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.கோவை டாடாபாத் பகுதியில் செயல்பட்டு வந்த, உள்ளூர் திட்டக்குழுமம் மற்றும் கோவை நஞ்சப்பா சாலையில் இயங்கி வந்த, மண்டல ஊரக நகரமைப்புத்துறை ஆகிய இரு வேறு பிரிவு அலுவலகங்களும், 'நகர் ஊரமைப்புத்துறையாக' பெயர் மாற்றப்பட்டு, நஞ்சப்பா சாலையிலுள்ள மாநகராட்சி வணிக வளாகத்தின் இரண்டாம் தளத்தில் செயல்படுகிறது.இதில் ஏற்கனவே இருந்த குறிச்சி புது நகர வளர்ச்சிக்குழுமம், கோவையிலுள்ள அலுவலகத்துடனும், திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய, மண்டல நகர ஊரமைப்பு அலுவலகம் அந்தந்த மாவட்ட அலுவலகத்துடனும் இணைக்கப்பட்டுள்ளது.கோவை மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில், 18.2 மீட்டர் உயரத்திற்குள் (அறுபது அடி) கட்டப்படும் அடுக்குமாடி கட்டடத்திற்கும், 2,000 சதுர அடிக்கும் மேலுள்ள வணிகவளாகத்திற்கும், மாவட்ட நகர் ஊரமைப்புத்துறையிடம் அனுமதி பெற வேண்டும்.பள்ளி, கல்லுாரி, சமுதாயக்கூடம், திருமண மண்டபம், ஷாப்பிங் மால்கள், மருத்துவமனை ஆகியவை, 2,000 சதுர அடியிலிருந்து 27,000 சதுர அடி வரை கட்டுமானப்பணி மேற்கொள்ள, இங்கு அனுமதி பெற வேண்டும்.நிலப்பயன்பாடு மாற்றம் செய்வதற்கு, இங்கு பரிந்துரை செய்து சென்னையில் அனுமதி பெறப்படுகிறது. கட்டுமானப்பணிகளை ஆய்வு செய்து, சான்று வழங்கும் பணிகளும் இங்கேயே மேற்கொள்ளப்படுகிறது.இப்பணிகளை மேற்கொள்ள, புற்றீசல் போல இடைத்தரகர்கள் முளைத்துள்ளனர். இவர்களை கட்டுப்படுத்த முடியாமல், நகர் ஊரமைப்புத்துறை திணறி வருகிறது. அதனால் இடைத்தரகர்களை தவிர்த்து, நேரடியாக இன்ஜினியரோடு உரிமையாளர்கள் வந்தால், சந்தேகங்களை தீர்த்து பணிகளையும் முடித்துக்கொள்ளலாம் என்கிறார், இணை இயக்குனர் வாழவந்தான்.இது குறித்து அவர் கூறுகையில், ''கட்டட அனுமதி பெறுவதற்கு, பொதுமக்கள் இடைத்தரகர்களை தவிர்த்து, நேரடியாக வருகை தரலாம். சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொண்டு, பணிகளை நிறைவு செய்யலாம். எங்களை போன்ற அரசு அதிகாரிகளை, மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X