பொது செய்தி

தமிழ்நாடு

கட்டான்ஜி மலையில் வருது 'சிட்டிசன் பார்க்!' பசுமையை மீட்க வனத்துறையினர் முயற்சி

Added : ஆக 28, 2021
Share
Advertisement
கோவை;கோவை கட்டான்ஜி மலையில், சிட்டிசன் பார்க் ஏற்படுத்த வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். கோவை வனக்கோட்டத்தில் வனவிலங்கு பெருக்கத்துக்காக, வனத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக, யானைகளின் தீவன பெருக்கத்துக்காக தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. வனத்தின் வளத்தை பெருக்க, பல்வேறு திட்டங்கள்
 கட்டான்ஜி மலையில் வருது 'சிட்டிசன் பார்க்!' பசுமையை மீட்க வனத்துறையினர் முயற்சி

கோவை;கோவை கட்டான்ஜி மலையில், சிட்டிசன் பார்க் ஏற்படுத்த வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். கோவை வனக்கோட்டத்தில் வனவிலங்கு பெருக்கத்துக்காக, வனத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக, யானைகளின் தீவன பெருக்கத்துக்காக தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. வனத்தின் வளத்தை பெருக்க, பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக நெ. 24 வீரபாண்டி அருகே உள்ள மருதுார் கிராமத்தில் உள்ள கட்டான்ஜி மலையில், 'சிட்டிசன் பார்க்' ஒன்றை ஏற்படுத்த, வனத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.கோவை கலெக்டராக இருந்த நாகராஜன், வருவாய் துறையின் கட்டுப்பாட்டில் இருந்த, 817 ஏக்கர் நிலத்தை கடந்த ஜூன் மாதம், தமிழ்நாடு வனத்துறை சட்டம், 1882 பிரிவு, 26ன் கீழ், பாதுகாக்கப்பட்ட வனநிலமாக அறிவித்தார். இந்நிலத்திலேயே தற்போது சிட்டிசன் பார்க் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பெயர் வெளியிட விரும்பாத, வனத்துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது: இந்த குறிப்பிட்ட பகுதியில் மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட சிறு விலங்குகள் உள்ளன. இப்பகுதி முழுவதும், பாறைகள் அதிகம் உள்ளன. இதனால், பெரிய மரங்கள் வளர்வதில் சிக்கல் ஏற்படுகிறது. இதைக்கருத்தில் கொண்டு, இப்பகுதிகளில் வளரக்கூடிய தாவரங்கள், அவற்றை பெருக்குவது குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதன் பின் அத்தாவரங்கள் இங்கு பயிரிடப்படும். சிட்டிசன் பார்க் ஏற்படுத்தப்பட்டு அவற்றில் பிறந்த நாள், திருமண நாள் மற்றும் முக்கியமான நாட்களில் பொதுமக்கள் இங்கு வந்து மரம், செடி உள்ளிட்டவை நட்டு, பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இப்பகுதியில் உள்ள மலைவாழ் மக்களுக்கு, வருவாய் ஏற்படுத்தும் பொருட்டு, 'எக்கோ டூரிசம்' ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. பாதுகாக்கப்பட்ட நிலப்பகுதியாக உள்ளதால், வனத்துறை நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியாது.இதையடுத்து, தமிழ்நாடு வனத்துறை சட்டம் பிரிவு, 16 ன் படி, இப்பகுதியை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக மாற்ற, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X