பொது செய்தி

தமிழ்நாடு

கடன் உதவிகளை வாரி வழங்குங்க! ரூ.22,712 கோடி கடன் வழங்க இலக்கு

Added : ஆக 28, 2021
Share
Advertisement
கோவை;கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், வங்கியாளர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.கூட்டத்தில் கலெக்டர் சமீரன் பேசியதாவது:கோவை மாவட்டத்தில் செயல்படும் வங்கிகள் சார்பில், நடப்பு 2021- 22ம் நிதியாண்டுக்கான கடன் இலக்கு, 22,712 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்த கடன் தொகையில் விவசாயத்துக்கு, 7,991 கோடி ரூபாயும், சிறு, குறு நடுத்தர தொழில்களுக்கு 9960 கோடி ரூபாயும், ஒதுக்கீடு

கோவை;கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், வங்கியாளர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.கூட்டத்தில் கலெக்டர் சமீரன் பேசியதாவது:கோவை மாவட்டத்தில் செயல்படும் வங்கிகள் சார்பில், நடப்பு 2021- 22ம் நிதியாண்டுக்கான கடன் இலக்கு, 22,712 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்த கடன் தொகையில் விவசாயத்துக்கு, 7,991 கோடி ரூபாயும், சிறு, குறு நடுத்தர தொழில்களுக்கு 9960 கோடி ரூபாயும், ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிற முன்னுரிமை கடன்களுக்கு, ரூ.4761 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கீடு, முந்தைய ஆண்டை காட்டிலும், 2238 கோடி ரூபாய் அதிகம்.கடனுதவி திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்த, வங்கிகள் தீவிர பணியாற்ற வேண்டும். கொரோனா தொற்று காரணமாக, அனைத்து தரப்பினரின் பொருளாதார சூழல் பாதிக்கப்பட்டுள்ளது. கடனுதவிகளை அதிகமாக வழங்குவதன் மூலம் தொழில் துறையினரை ஊக்கப்படுத்தி, வளர்ச்சிப்பாதையில் செல்ல முடியும்.குறிப்பாக, அரசு சுய தொழில் கடனுதவி திட்ட விண்ணப்பங்களின் மீது, தனிக்கவனம் செலுத்த வேண்டும். புதிய தொழில் முனைவோருக்கு கடனுதவி வழங்கவும், கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு, கலெக்டர் பேசினார்.நிகழ்ச்சியில், தேங்காய் நார் மதிப்பு கூட்டப்பட்ட பொருள் தயாரிக்கும் நிறுவனம் அமைக்க, 25 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டது. மகளிர் திட்டம் மூலம், சின்னக்கள்ளிப்பட்டி ஊராட்சி கூட்டமைப்புக்கு, 25 லட்சம் ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டது.மகளிர் திட்ட இயக்குனர் ரமேஷ் குமார், நபார்டு வங்கி மாவட்ட மேலாளர் திருமலைராவ், கனரா வங்கி துணை மேலாளர் சீனிவாசராவ், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கார்த்திகைவாசன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கணேஷ், மாவட்ட மேலாளர் செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X