பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் 'நானோ யூரியா' செயல்விளக்கம்

Added : ஆக 28, 2021
Share
Advertisement
கோவை:சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள, நானோ யூரியா உரம் குறித்து, விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.கோவை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம், இணையவழியில் நடந்தது. கலெக்டர் சமீரன் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், வேளாண் இணை இயக்குனர் சித்ரா தேவி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை)

கோவை:சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள, நானோ யூரியா உரம் குறித்து, விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.கோவை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம், இணையவழியில் நடந்தது. கலெக்டர் சமீரன் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், வேளாண் இணை இயக்குனர் சித்ரா தேவி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தமிழ்செல்வி மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.இந்திய உழவர் உரக்கூட்டுறவு நிறுவனம் சார்பில், யூரியா உரத்துக்கு மாற்றாக, மண் மற்றும் நீர் மாசடையாமல் சுற்றுச்சூழலை பாதுகாத்து, மகசூல் அதிகரிக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட, நானோ யூரியா உரம் பயன்பாடு குறித்து, செயல் விளக்கம் காண்பிக்கப்பட்டது.அந்தந்த வட்டார வேளாண் உதவி இயக்குனர் அலுவலகங்களில் இருந்து, இணைய வழியாக பங்கேற்ற விவசாயிகள், தங்கள் குறைகளை தெரிவித்தனர். கோரிக்கை மனுக்களும் தரப்பட்டன.இவற்றின் மீது, விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X