அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனை:நீண்ட நாட்கள் காக்க வைப்பதாக புகார்

Added : ஆக 28, 2021
Share
Advertisement
கோவை:கோவை அரசு மருத்துவமனையில், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனைக்கு செல்லும் நோயாளிகளை, நீண்ட நாட்கள் காக்க வைப்பதாக புகார் எழுந்துள்ளது.கோவை அரசு மருத்துவமனையில், உள் மற்றும் வெளிநோயாளிகள் என தினமும், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வருகின்றனர். இங்கு, நோயின் தன்மையை அறிந்து கொள்ள, ரத்த பரிசோதனை, சி.டி.,எம். ஆர்.ஐ.,மற்றும் யு.எஸ்.ஜி.,உள்ளிட்ட, பல்வேறு

கோவை:கோவை அரசு மருத்துவமனையில், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனைக்கு செல்லும் நோயாளிகளை, நீண்ட நாட்கள் காக்க வைப்பதாக புகார் எழுந்துள்ளது.கோவை அரசு மருத்துவமனையில், உள் மற்றும் வெளிநோயாளிகள் என தினமும், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வருகின்றனர். இங்கு, நோயின் தன்மையை அறிந்து கொள்ள, ரத்த பரிசோதனை, சி.டி.,எம். ஆர்.ஐ.,மற்றும் யு.எஸ்.ஜி.,உள்ளிட்ட, பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.இதில், பல்வேறு உடல் உபாதைகள் பற்றி தெரிந்து கொள்ள, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் (யு.எஸ்.ஜி.,) பரிசோதனை, மிக முக்கியம்.அவ்வாறு, பரிசோதனைக்கு செல்லும் நோயாளிகளை, 10 முதல் 15 நாட்கள் வரை காக்க வைத்து பின்னர்தான், பரிசோதனை செய்யப்படுகிறது.இது குறித்து, நோயாளி ஒருவர் கூறுகையில், 'ரேடியாலஜி துறையில் மொத்தம் 2 அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் கருவிகள்தான் உள்ளன. சிகிச்சையளிக்கும் டாக்டர்களோ, உடனே ஸ்கேன் எடுத்து வர சொல்கின்றனர். இங்கு வந்தால், 9:00 மணிக்கு மேல்தான் 'என்ட்ரி' போடுகின்றனர். அதேசமயம், உள்நோயாளிகளுக்கு முன்னுரிமை கொடுப்பதில்லை.அதன்பின், 15 நாட்கள் கழித்து வரவும் என எழுதி கொடுக்கின்றனர். இதை டாக்டர்களிடம் சொன்னால், பரிசோதனை ரிப்போர்ட் பார்த்துதான், சிகிச்சையளிக்க முடியும் என்கின்றனர். 15 நாள் வரை எப்படி வலியை பொறுத்துக் கொண்டு இருக்க முடியும்.ஒருவழியாக பரிசோதனை எடுத்து விட்டு டாக்டர்களிடம் சென்றால், அவர்கள் விடுமுறையில் இருக்கின்றனர். பயிற்சி மருத்துவர்களை அணுகினால், 'எங்ககிட்ட எதுக்கு காட்றீங்க' என மரியாதை குறைவாக பேசுகின்றனர்' என்றார்.மருத்துவமனை டீன் நிர்மலாவிடம் கேட்டபோது, ''ஒவ்வொரு முக்கிய துறைகளிலும், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் கருவிகள் உள்ளன. தவிர ரேடியாலஜி துறையில், 2 கருவிகள் உள்ளன. ஒரு நோயாளிக்கு இந்த பரிசோதனை மேற்கொள்ள, குறைந்தது 10 நிமிடங்களுக்கு மேல் ஆகும்.அந்த வகையில், ஒரு டாக்டர் நாள் ஒன்றுக்கு, 50க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு பரிசோதனை செய்ய வேண்டியிருக்கும். கூடுதலாக கருவிகள் நிறுவினால், அதற்கென டாக்டர்களும் நியமிக்க வேண்டும் அல்லவா.அதே சமயம், அவசர சிகிச்சை தேவைப்படுவோருக்கு, உடனடியாக ஸ்கேன் செய்யப்படுகிறது. டாக்டர்கள் யாரேனும் நோயாளிகளிடம், கடினமாக நடந்து கொண்டால் உடனே என்னிடம் புகார் தெரிவிக்கலாம். உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X