டோல்கேட் நிர்வாகத்திற்கு எதிராக கிராமத்தினர் புகார்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

டோல்கேட் நிர்வாகத்திற்கு எதிராக கிராமத்தினர் புகார்

Added : ஆக 28, 2021
Share
திருமங்கலம் : கப்பலுாரில் உள்ள டோல்கேட் நிர்வாக அலுவலகம், கண்காணிப்பு அறை மற்றும் பணியாளர்கள் ஓய்வு அறை கட்டும் பணி நடக்கிறது.இதற்காக ஊராட்சி நிர்வாகத்தின் அனுமதியின்றி மரங்களை வெட்டியதாகவும், நீர்வழிபாதையில் கட்டுமான பணிகள் மேற்கொள்வதாகவும் கூறி ஊராட்சி தலைவர் கண்ணன் தலைமையில் கிராமத்தினர் மணல் அள்ளும் இயந்திரத்தை சிறை பிடித்தனர். போலீசார் பேச்சுவார்த்தை

திருமங்கலம் : கப்பலுாரில் உள்ள டோல்கேட் நிர்வாக அலுவலகம், கண்காணிப்பு அறை மற்றும் பணியாளர்கள் ஓய்வு அறை கட்டும் பணி நடக்கிறது.

இதற்காக ஊராட்சி நிர்வாகத்தின் அனுமதியின்றி மரங்களை வெட்டியதாகவும், நீர்வழிபாதையில் கட்டுமான பணிகள் மேற்கொள்வதாகவும் கூறி ஊராட்சி தலைவர் கண்ணன் தலைமையில் கிராமத்தினர் மணல் அள்ளும் இயந்திரத்தை சிறை பிடித்தனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.கப்பலுார் ஊராட்சிக்கு சொந்தமான நீர்வழி பாதையைஆக்கிரமித்து டோல்கேட் நிர்வாகம் கட்டுமான பணிகள் மேற்கொள்வதாகவும், அதை தடை செய்யவும் கோரி ஆர்.டி.ஓ., அனிதாவிடம் கிராமத்தினர் புகார் அளித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X