பொது செய்தி

தமிழ்நாடு

விதிமீறி விசைப்படகில் மீன்பிடிப்பு

Added : ஆக 28, 2021
Share
Advertisement
கடலுார்-கடலுாரில் விதிமுறை மீறி விசைப்படகில் மீன்பிடித்ததால், இழுவலை மற்றும் மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.தமிழக கடல் பகுதியில் ஐந்து நாட்டிக்கல் மைல்களுக்குள் விசைப்படகில் மீன்பிடிக்க தடை உள்ளது. கடலுார் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் தமிழ்மாறன் தலைமையில் ஆய்வாளர் மணிகண்டன், உதவி ஆய்வாளர் பிரபாகரன் ஆகியோர் நேற்று கடலுார் முதுநகர் அடுத்த

கடலுார்-கடலுாரில் விதிமுறை மீறி விசைப்படகில் மீன்பிடித்ததால், இழுவலை மற்றும் மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.தமிழக கடல் பகுதியில் ஐந்து நாட்டிக்கல் மைல்களுக்குள் விசைப்படகில் மீன்பிடிக்க தடை உள்ளது. கடலுார் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் தமிழ்மாறன் தலைமையில் ஆய்வாளர் மணிகண்டன், உதவி ஆய்வாளர் பிரபாகரன் ஆகியோர் நேற்று கடலுார் முதுநகர் அடுத்த சித்திரைப்பேட்டை, பெரியகுப்பம் உள்ளிட்ட கடற்கரை பகுதியில் ரோந்து சென்றனர்.கடலில், மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டத்தை மீறி 5 நாட்டிக்கல் கடல் மைல் தொலைவுக்குள் 6 விசைப் படகுகளில் இழுவலைகளை பயன்படுத்தி மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். இதை பார்த்த அதிகாரிகள் ஒரு படகை சுற்றி வளைத்தனர். அந்த படகை கரைக்கு கொண்டு வந்து வலை மற்றும் மீன்களை பறிமுதல் செய்தனர். அந்த மீன்கள் ஏலம் விடப்பட்டது.அந்த விசைப்படகின் உரிமையாளருக்கு தற்காலிகமாக டீசல் மானியம் ரத்து செய்யப்பட்டது. விசாரணை முடியும் வரை மீன்பிடிக்கவும் தடை விதிக்கப்பட்டது. மேலும், கரைக்கு திரும்பாத 5 விசைப்படகுகள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விசைப் படகை மீன்வளத்துறை அதிகாரிகள் மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வந்த போது, மீனவர்கள் திரண்டு, வலைகளை பறிமுதல் செய்ய எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X