பொது செய்தி

தமிழ்நாடு

கோவில் வாசல் முன் நடந்த திருமணங்கள்

Added : ஆக 28, 2021
Share
Advertisement
கடலுார்-கடலுார் திருவந்திபுரம் தேவநாதசாமி கோவில் முன் சாலையில் 50க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்தன.கொரோனா ஊரடங்கு காரணமாக கோவிலில் திருமணங்கள் நடத்துவதற்கான தடை நீடிக்கிறது. இந்நிலையில் ஆவணியில் முதல் முகூர்த்தமான 20ம் தேதி 100க்கும் மேற்பட்ட திருமணங்கள் திருவந்திபுரம் தேவநாதசாமி கோவில் முன் சாலையிலேயே நடந்தது. நேற்று முன்தினம் 40க்கும் மேற்பட்ட திருமணங்களும்,

கடலுார்-கடலுார் திருவந்திபுரம் தேவநாதசாமி கோவில் முன் சாலையில் 50க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்தன.கொரோனா ஊரடங்கு காரணமாக கோவிலில் திருமணங்கள் நடத்துவதற்கான தடை நீடிக்கிறது. இந்நிலையில் ஆவணியில் முதல் முகூர்த்தமான 20ம் தேதி 100க்கும் மேற்பட்ட திருமணங்கள் திருவந்திபுரம் தேவநாதசாமி கோவில் முன் சாலையிலேயே நடந்தது. நேற்று முன்தினம் 40க்கும் மேற்பட்ட திருமணங்களும், நேற்று 50க்கும் மேற்பட்ட திருமணங்களும் நடந்தன. இதனால் கூட்டம் அலைமோதியது. வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் கோவில்களில் தரிசனத்திற்கு அனுமதியில்லாததால் நேற்று திருமண ஜோடிகள் மற்றும் பக்தர்கள் வெளியில் இருந்து கோபுரத்தை தரிசித்துச் சென்றனர்.அவர்களில் பலர் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X