சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ 2.50 லட்சம் குட்கா பறிமுதல்:

Added : ஆக 28, 2021
Share
Advertisement
குறிஞ்சிப்பாடி-குறிஞ்சிப்பாடியில் பதுக்கிய ரூ 2.50 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் 3 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள இருவரை தேடி வருகின்றனர்.கடலுார் மாவட்டம், குறிஞ்சிப்பாடியில் இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா மற்றும் போலீசார் நேற்று காலை ரோந்து சென்றனர். குறிஞ்சிப்பாடி கே.என்.வி. நகர் முகப்பில் பைக்கில்

குறிஞ்சிப்பாடி-குறிஞ்சிப்பாடியில் பதுக்கிய ரூ 2.50 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் 3 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள இருவரை தேடி வருகின்றனர்.கடலுார் மாவட்டம், குறிஞ்சிப்பாடியில் இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா மற்றும் போலீசார் நேற்று காலை ரோந்து சென்றனர். குறிஞ்சிப்பாடி கே.என்.வி. நகர் முகப்பில் பைக்கில் மூட்டைகளுடன் சென்ற சக்திவேல் என்ற வாலிபரை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் 2 மூட்டைகளில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை எடுத்துச் சென்றது தெரிந்தது.பின், குறிஞ்சிப்பாடி கே.என்.வி. நகரில் அவரின் மைத்துனர் ராஜா என்பவர் வீட்டில் குடோனில் பதுக்கி வைத்திருந்த 400 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ. 2 .50 லட்சம் ஆகும்.இது குறித்து வழக்கு பதிந்து குறிஞ்சிப்பாடியை சேர்ந்த சக்திவேலை, 45; குட்கா பொருட்கள் விற்ற மீனாட்சி பேட்டையைச் சேர்ந்த சிவமணி, 49; சத்திரம் கிராமத்தைச்சேர்ந்த கதிர்வேல், 51; ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள வடலுாரில் கடை நடத்தும் சுரேஷ், சக்திவேலின் மைத்துனர் ராஜா ஆகியோரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X